தாய்லாந்து நாட்டு மன்னரின் காதலி Suthida Vajiralongkorn பல வருடங்களாக சுவிற்சர்லாந்தில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
தாய்லாந்து நாட்டின் மன்னர் Maha Vajiralongkorn தன் காதலியான, தற்போதைய ராணி Suthida Vajiralongkorn ஒப்வால்டன் மண்டலத்தில் உள்ள Waldegg என்ற பிரபல ஹோட்டலில் தங்கியிருந்திருக்கிறார். மேலும் அவர் சுமார் நான்கு வருடமாக சுவிட்சர்லாந்தில் தங்கி இருந்ததாக தெரியவந்திருக்கிறது.
இந்நிலையில் மன்னர் தன் காதலியைப் பார்ப்பதற்காக சுவிட்சர்லாந்திற்கு பல தடவை ரகசியமாக வந்து சென்றதாகவும், அப்போது ராணி Suthida ஹோட்டல் பணியாளர்களிடம் தெளிவின்றி செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தாய்லாந்து மன்னர் கடந்த 2018 ஆம் வருடம் தன் காதலியை ஒருமுறை சந்திக்க வந்திருந்த சமயத்தில் அந்த ஹோட்டலின் 7 ஆவது மாடியை மொத்தமாக முன்பதிவு செய்துள்ளார், என்றும் ஆறாம் மாடியில் மன்னருக்காக பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் தங்கியிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் வருடம் தன் காதலி Suthidaவை மன்னர் நான்காவதாக திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு Suthida ராணியாக பதவியேற்றார். எனினும் அந்த ஓட்டலில் Suthida தற்போதும் தங்கியுள்ளாரா? என்பது ரகசியமாகவே உள்ளது.