தமிழகம்

கவர்னருடன் ரஜினிகாந்த் அரசியல் பேச்சு – மார்க்சிஸ்ட் கண்டனம்

54views
நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் குறித்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு துறை பிரபலங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். இந்த நிலையில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவர், கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று காலை 11.30 மணியளவில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்து விவாதித்ததாக ரஜினிகாந்த் பரபரப்பு கருத்தை தெரிவித்தார். இந்நிலையில், கவர்னருடன் அரசியல் குறித்து விவாதித்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசியல் அலுவலகமா? கவர்னர் மாளிகை? இனியும் பொறுப்போமா? தமிழ்நாடு கவர்னரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக கவர்னரை சந்திப்பது ஏற்புடையதே.
ஆனால் கவர்னர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக கவர்னர் மாளிகை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது. இது தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது. தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்?! இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது. இது தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது.
தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் கவர்னரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொருத்துக்கொள்ளப் போகிறோம்?! கவர்னர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் கவர்னருக்கு எதனால் வந்தது. அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து ‘தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியாது’ எனவும் திரு ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது.
கவர்னர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், கவர்னர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக கவர்னர் மாளிகை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!