சினிமா

‘கலகத் தலைவன்’ ஆனார் உதயநிதி ஸ்டாலின்… மோஷன் போஸ்டருடன் வெளியான புதிய அறிவிப்பு

107views

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், பிக்பாஸ் ஆரவ் நடிப்பில் உருவாகி இருக்கும் படத்திற்கு ‘கலகத் தலைவன்’ என பெயரிடப்பட்டு உள்ளது.

நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அண்மையில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அருண் ராஜா காமராஜ் இயக்கியிருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தில் பிசியாக நடித்து வந்தார் உதயநிதி.

இந்நிலையில், அவர் நடிப்பில் தயாராகி உள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை மீகாமீன், தடையறத்தாக்க, தடம் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆரவ் இப்படத்தில் உதயநிதிக்கு வில்லனாக நடித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!