இந்தியா

கர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு அபராதம்: அர்ச்சகர் உட்பட 8 பேர் கைது

57views

கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் கங்காதர் (24). தலித் வகுப்பை சேர்ந்த இவர் கடந்த 14-ம் தேதி கரடகி கிராமத்தில் உள்ள மஹாலட்சுமி கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார்.

பூஜை முடிந்து அவர் வெளியே வந்ததைப் பார்த்த கோயில் அர்ச்சகர் பசவராஜ், பதிகர் கரடகி கிராமத்தை சேர்ந்த ஊர் பெரியவர்கள் ரேவண்ணா சுவாமி, சேகரப்பா, சரணப்பா, பிரஷாந்த், பசவராஜ், கடப்பா நாயக் ஆகியோரை அழைத்து ஊர் பஞ்சாயத்து கூட்டியுள்ளார்.

அந்த பஞ்சாயத்தில் கூறியபடிகங்காதர் கடந்த 20-ம் தேதி கோயிலுக்கு பூஜை செய்வதற்காக ரூ.11,000 அபராதமாக வழங்கியுள்ளார். அத்துடன் இல்லாமல் பஞ்சாயத்தார், இன்னும் ஒருமாதத்தில் ரூ.5 லட்சம் அபராதத்தை தருவதாக எழுதி வாங்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததலித் சங்கர்ஷ சமிதி அமைப் பினர் குல்பர்கா மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் டி.ஸ்ரீதராவிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீஸார் விசாரித்து, அர்ச்சகர் பசவராஜ் பதிகர், ரேவண்ணா சுவாமி, சேகரப்பா, சரணப்பா, பசவராஜ், கடப்பா நாயக் உள்ளிட்ட 8 பேர் மீது எஸ்.சி., எஸ்.டி.வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 504, 149 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை யடுத்து 8 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கடந்த வாரத்தில் கொப்பல் அருகே கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தலித் குழந்தைக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட் டது. இதைத் தொடர்ந்து இந்தசம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!