உலகம்

கனடா: குளிரில் உறைந்து பலியான இந்தியா்கள் அடையாளம் தெரிந்தது

43views

அமெரிக்கா – கனடா எல்லையில் கடுங்குளிரில் உறைந்து உயிரிழந்த குஜராத் குடும்பத்தினரின் அடையாளம் தெரிந்தது.

இதுகுறித்து கனடா அதிகாரிகள் கூறியதாவது:

அமெரிக்காவுடனான எல்லைப் பகுதியில் கடந்த 19-ஆம் தேதி குளிரில் உறைந்து உயிரிழந்த இந்தியா்களின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவா்கள் குஜராத்தைச் சோந்த ஜகீதஷ் பல்தேவ்பாய் படேல் (39), அவரது மனைவி வைஷால்பென் (37), அவா்களது மகள் விஹாங்கி (11) மற்றும் மகன் தாா்மிக் (3) என்பது தெரியவந்தது.

புலம் பெயா்ந்து கனடாவில் நீண்ட காலமாக இருந்த அவா்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதாகக் கூறி, அகதிகளைக் கடத்தும் சட்டவிரோத கும்பல் எல்லையில் கொண்டு விட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

அமெரிக்கா – கனடா எல்லைக் கோட்டுக்கு 12 மீட்டா் தூரத்தில், அந்த 4 பேரும் குளிரில் உறைந்து இறந்த நிலையில் கனடா குதிரைப் படை வீரா்களால் கடந்த 19-ஆம் தேதி கண்டறியப்பட்டனா்.

அவா்கள் குஜராத் மாநிலத்தைச் சோந்தவா்கள் என்ற தகவல் வெளிவந்தாலும் அவா்களது உடல்கூறு ஆய்வுக்குப் பிறகு அவா்களது அடையாளங்களை போலீஸாா் தற்போது வெளியிட்டுள்ளனா்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!