அறிவிப்பு

“கதை சொல்ல வா(ருங்கள்)” – கானல் குழுமம் காணொலி வழியாக கதைசொல்லும் போட்டி

180views
நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் கானல் குழுமம் ஒரு புதிய போட்டி அறிவிப்போடு உங்கள் முன்னால்.
இம்முறையும் கானல் நடத்தவிருப்பது காணொலிப் போட்டியைத்தான். ஆனால், போட்டியாளர்களைக் “கதை சொல்ல வா(ருங்கள்)” எனக் கானல் குழுமம் அன்புடன் அழைக்கிறது.
ஆம் நண்பர்களே!!
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நீங்கள் ரசித்துப்‌ படித்த, உங்களை அப்படியே உலுக்கிய, ‘என்ன மாதிரியான எழுத்து இது?” என உங்களை வியக்க வைத்த, ஏதேனும் சிறுகதையை எங்களுக்கும் காணொலி வழியாகச் சொல்ல வேண்டும் என்பதுதான். கதை உங்களது சொந்தக் கற்பனையாக இருந்தால் இரட்டை மகிழ்ச்சி. (அதற்காக “வாச்சாப் யூனிவர்சிட்டி” யில் வாசித்த கதைகளோடு களமிறங்க வேண்டாம்)
“ஐ டோன்ட் ரீட் டமில் லிட்ரேச்சர்” என்று ‘பீட்டர்’ விடுபவரா நீங்கள்? சிக்கலில்லை. நீங்கள் வாசித்த பிற மொழிக் கதைகளையும் கூட நீங்கள் காணொலி வழியாக எங்களுக்குச் சொல்லலாம். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் நிச்சயம் காணொலியில் தமிழில்தான் பேசியாக வேண்டும்
வேறு விதிமுறைகள் உளதா எனக் கேட்பவர்களுக்கு…
தொடர்ந்து வாசியுங்கள்.
1. போட்டியில் பங்கு பெறுபவர் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். ( சிறார்கள் பொறுத்தருள்க)
2. தாங்கள் படித்த, கேட்ட அல்லது சொந்தக் கற்பனையில் தோன்றிய கதையை ஏழு நிமிடங்களுக்குள் சுவை குறையாமல் காணொலியாகப் பதிவு செய்து அனுப்ப வேண்டும்.
3. போட்டியில் கலந்து கொள்ளும் காணொலி, இதற்கு முன் வேறெங்கும் பங்கு கொள்ளாத, பதிவு செய்யப்படாத காணொலியாக இருக்க வேண்டும்.
4. காணொலிகளைக் கானல் ‘ஃபேஸ்புக்’ பக்கத்தில் உள்ள ‘இன்பாக்ஸ்’க்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.
5. கிடைக்கப் பெற்றக் காணொலிகள் கானல் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு உரிய எண் வழங்கிய பின்னர் வலையேற்றம் செய்யப்படும்.
அதற்கான இணைப்பு படைப்பாளர்களுக்கு அனுப்பப்படும். அதன் பின்னரே அவர்கள் தங்கள் பதிவுகளிலோ அல்லது தத்தமது நண்பர்கள் வழியாகவோ அந்த இணைப்பைப் பகிர்ந்து கொள்ளலாம்.
7. ஒருவர் அதிக பட்சமாக இரண்டு காணொலிகள் மட்டும் அனுப்பலாம்.
8. மிக மிக முக்கியமாக, காணொலி வெட்டி ஒட்டப்பட்டதாக இல்லாமல் இயல்பாக, ஒரே வீச்சில் முழுக் கதையையும் பேசிப் பதிவு செய்த காணொலியாக இருக்க வேண்டும்.
9. காணொலிகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி பிப்ரவரி 28, 2022 அமீரக நேரம் நள்ளிரவு 12 மணி வரை
10. நடுவர் குழுவின் தீர்ப்பு வெளியாகும் தேதி: மார்ச் 8, 2022. முதன்மை நடுவரின் தீர்ப்பு அதன் பின்னர் ஒரு வார கால அவகாசத்தில் வெளியாகும்.
இந்தக் காணொலிப் போட்டியில் வெற்றி‌ பெறுகிறவர்களுக்குப் பரிசுகளும் காத்திருக்கின்றன.

முதல் பரிசாக 5000 இந்திய ரூபாய்களும், இரண்டாம் பரிசாக 3000
இந்திய ரூபாய்களும், மூன்றாம் பரிசாக இருவருக்கு தலா 1500 இந்திய ரூபாய்களும், ஆறுதல் பரிசாக ஆறு பேருக்கு 500 இந்திய ரூபாய்களும் வழங்கப்படும். மொத்தமாகப் பத்து பேருக்குப் பரிசுகள்.

போட்டியின் இறுதியில் அதிக விருப்பக்‌குறி பெறும் காணொலிக்கு சிறப்புப் பரிசாக 1000 இந்திய ரூபாய்கள் வழங்கப்படும். ( அதிக விருப்பக்குறி மட்டுமே போட்டியின் முடிவைத் தீர்மானிக்காது)
கடந்த ஆண்டுகளைப் போலவே, அனைவரும் கலந்து கொண்டு சிறபிக்குமாறும், பரிசுகளை வெல்லுமாறும் அன்புடன் அழைக்கிறோம். உங்கள் நண்பர்களிடமும் நீங்கள் சார்ந்து இயங்கும் குழுமங்களிலும் இந்தப் போட்டியைப் பற்றி பகிர்ந்து போட்டி பரவலாகச் சென்றடைய துணையாயிருங்கள்.
கதைகள் சொல்ல வாருங்கள்!! பரிசுகளை வென்று செல்லுங்கள்!!
அன்புடன்
கானல் குழுமம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!