179
செழியனின் மகள் ரத்தினா 11 வயதில் வளர்ந்து நிற்கிறாள்.
அவளுடன் அதிகம் நேரம் செலவிட செய்கிறான்.
இதற்கிடையே கார்குழலி யை திருமணம் செய்ததில் இருந்து தேவிக்கும் செழியனுக்கு மிடையே கருத்து வேறுபாடு அதிகமாக இருந்தது,
இருப்பினும் அவள் தன் மகளுக்காக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வந்தாள்.
செழியன் ரத்தினா வை அன்பாக பார்த்துக் கொள்வது, அவளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பது இது எதுவுமே கார்குழலி பிடிக்கவில்லை,
கார்குழலி செழியனிடம் அடிக்கடி சண்டை இடுவது வாடிக்கையாகிப் போனது.
ஒருநாள் செழியன் வந்ததும் அவனிடம் “ஏன் உனக்கு இவ்வளவு பாகுபாடு??? உன் மகளுக்கு மட்டும் அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொடுக்கிறாய். அவளுடன் மட்டும் அதிக நேரம் செலவிடுகிராய்.
என் மகளுடன் மட்டும் நீ இப்படி எல்லாம் இருப்பதில்லை???”
என்று கேட்ட கார்குழலி யை நன்றாக திட்டிவிட்டு “இனி என் முகத்தில் விழிக்காதே!!! “என்று கூறிவிட்டு அவன் வீட்டிற்கு செல்கிறான்.
கார்குழலி என்மேல் உள்ள கோபத்தால் அவள் வீட்டுக்குச் செல்வதை நிறுத்துகிறான்.
இவன் வராமல் இருப்பதை அறிந்த கார்குழலி நாளடைவில் இதுவே நிலை ஆகிவிடுமோ என்று நினைத்து.
குழந்தையை தூக்கிக்கொண்டு வந்து தேவியின் வீட்டு வாசலில் நிற்கிறாள்.
உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக வெளியூர் சென்றிருக்கிறான்.
அப்பொழுது கார்குழலி லக்ஷ்மியின் வீட்டுக்கே வந்து செழியனை பார்க்கவேண்டும் என்று வாசலில் குரல் இடுகிறாள்.
சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த லட்சுமி வெளியே வந்து யாரென்று பார்த்தால் அது கார்குழலி.
“என்ன வேண்டும் உனக்கு???”
என்று கேட்ட லட்சுமிக்கு…….
அவளுடைய ஐந்து வயது மகளுடன் வந்து நின்று “அவர் வீட்டு பக்கம் வருவதே இல்லை இதனால் என் குழந்தை அவரைப் பார்க்காமல் நோய்வாய்ப்பட்டு உள்ளாள் அதனாலேயே அவரைப் பார்க்க என்று இங்கு வந்தேன்.”
“அவன் இங்கு இல்லை. அவன் வந்ததும் அவனிடம் சொல்கிறேன். இப்பொழுது நீ இங்கிருந்து கிளம்பலாம்.”
“நான் என்ன சொல்ல வர்றேன்னா……..”
“நீ ஒன்றும் சொல்லத் தேவையில்லை, இங்கிருந்து கிளம்பு “என்று சொல்லிவிட்டு கதவை அடைகிறாள்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
-
ஷண்முக பூரண்யா. அ
add a comment