313views
இன்று…
இதே போல சில காலம் இவர்களுடைய சந்திப்பு தொடர்கிறது.
கார்குழலி படிப்பும் முடிந்து வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள்.
ஒரு நாள் செழியன் அவளை பார்க்க வருகிறான்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அவளுடைய அம்மா இருவரையும் பார்த்துவிட்டு கார்குழலி யின் கன்னத்தில் அறைந்து தரதரவென இழுத்து செல்கிறாள். வீட்டுக்கு சென்ற பின்பு
“உனக்கு ஏதாவது புத்தி கித்தி கெட்டுப் போச்சா. படித்து நல்ல வேலையில் இருக்கற நல்லா சம்பாதிக்கிற போயும் போயும் ஒரு பத்தாவது கூட தாண்டாத பெட்டி கடை வச்சிருக்கான்.
அவனை விரும்புகிறாயா.. இது எங்கேயாவது சரி வருமா யோசிச்சியா நீ”
-அப்படின்னு அவளுக்கு மூளை சலவை செய்கிறாள்.
அம்மா சொன்னதை யோசித்துப் பார்க்கிறாள் கார்குழலி. இரண்டு நாள் கழித்து செழியன் அவங்க அம்மாகிட்ட விஷயத்தைச் சொல்றான்.
“அம்மா நான் கல்யாணம் பண்ணா அவளைத் தான் பண்ணுவேன். இல்லனா கடைசிவரை இப்படியே இருந்து விடுவேன்”
அப்படினு சொல்லி அம்மாவ சம்மதிக்க வைக்கிறான்.
அம்மாவும் “சரி வாடா. நான் இன்னைக்கு போய் பொண்ணு கேட்கிறேன்” அப்படின்னு சொல்லி ஒரு தட்டுல பழம் பூ இனிப்பு வச்சு எடுத்துட்டு கார்குழலி வீட்டுக்குள்ள போனதும் ஒருத்தரையும் காணம் செழியன் கூப்பிடுறான் கார்குழலி கார்குழலி னு…
அறையோட கதவைத்திறந்து வெளிய வரா. வந்ததும் “எதுக்கு இங்க வந்த ஏன் வந்த” அப்படின்னு கேட்கிறாள்.
“என்னடா இவ இப்படி கேக்குற”
” இரும்மா இரும்மா நானே பேசிக்கிறேன் அவகிட்ட …என்னாச்சு உனக்கு கார்குழலி நீதான் நம்ம விஷயத்தை பத்தி எப்ப சொல்லுவேன் கேட்டேன் இப்போ நான் எங்க அம்மாவே கூட்டிட்டு வந்திருக்கேன். எங்க அம்மா கிட்ட நீ பேச வேண்டாம் .இந்த விஷயத்தை இதோட முடிச்சுக்கலாம். ஏன் என்ன இப்படி மாறிட்ட திடீர்னு”
” ஆமா நான் இப்போதான் தெளிவா இருக்கேன். நீ என்ன படிச்சிருக்க. ஒரு நல்ல வேலையில கூட இல்லை ஒரு பெட்டிக் கடை வச்சிருக்க இதை வைத்து எப்படி என்னை நாளை காப்பாத்த முடியும் அதனாலே இது சரிப்பட்டு வராதுன்னு எனக்கு தோணிச்சு அதனால இதோட எல்லாத்தையும் முடிச்சுக்கலாம் நீ எனக்கு வேண்டாம்”
– என்று கார்குழலி சொல்ல அங்கிருந்து எதுவும் பேசாமல் மனசு உடைந்த செழியன் பக்கத்துல உள்ள கடைக்கு போயி பூச்சி மருந்து வாங்கி அவனோட சட்டைப்பைக்குள் வைத்திருக்கிறான்.
கொஞ்ச நேரம் கழிச்சி வீட்டுக்கு போனதும் “தம்பி எதுவும் மனசுல வச்சுக்க தப்பா எல்லாம் சரியாயிடும். வா வந்து கொஞ்சம் சாப்பிடு இப்படியே இருந்தா எப்படினு “அம்மா சொல்றா.
சரி போய் சாப்பாடு சமைச்சு எடுத்துட்டு வாமான்னு சொல்லிட்டு அவனது அறைக்குள்ள போய் கதவு அடைகிறான்.
சட்டையில இருக்கிற பூச்சி மருந்தை எடுத்து குடிச்சிட்டு மயங்கி விழுகிறான் .
நாளை மீள்வானா என பார்ப்போம்.
-
ஷண்முக பூரண்யா. அ
Good
Nice..
Thank you 💞
Nice super
Supper