204
உணவு எடுத்து வந்த லட்சுமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது!
செழியனை காணவில்லை தேடினாள், அறை தாழிடப்பட்டிருந்தது..
“செழியா கதவைத்திற அம்மா நான் இருக்கிறேன் உனக்கு எது வேணுமோ அதை நான் செய்கிறேன் .என்று நம்பிக்கை கொடுத்தாள்,
கதவைத் தட்டி தட்டி திறக்காததால்,
அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்டாள். பக்கத்து வீட்டுக்காரர் வந்து கதவை உடைத்து செழியனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
லட்சுமிக்கு இப்போது தான் உயிர் வந்தது. செழியன் கண் திறந்து பார்த்தான்.
“செழியா ஒண்ணு கேட்டுக்கோ இதெல்லாம் கோழைத்தனம். உயிரை விடுவதற்கு ஒரு நிமிஷம் ஆகும்.
ஆனால் நீ அவ முன்னாடி பல வருஷம் நல்லா வாழ்ந்து காட்டணும். அதுக்கு நான் உன் அம்மா இருக்கேன்.”
செழியன் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்ததும், லக்ஷ்மி அருகில் அமர்ந்து அதிக நேரம் செலவிட்டாள். அவனோட அதிக நேரம் பேசி பேசி அவன் மனதை மாற்ற செய்தாள்.
“செழியா அப்பாவோட தங்கச்சி பொண்ணு இருக்கா அவ உனக்கு பொருத்தமா இருப்பா அவளை உனக்கு பேசி முடிக்கலாமா, நீ சரின்னு சொன்னா பண்ணலாம். இல்லனா வேண்டாம். உன்னை வேண்டான்னு சொன்னவ முன்னாடி நீ நல்லா வாழ்ந்து காட்டணும் டா அதான் என் ஆசை “
“சரிமா இனி எல்லாம் உன் இஷ்டம் மா நீ எப்ப பாக்க வரணும் சொல்லு அப்ப நானும் வரேன்”
” சரி டா தங்கம் எனக்கு நீ சொன்னதே போதும் “.
“அடுத்த வாரமே போய் பார்த்துட்டு வந்துடலாம் சரியா,”
பெண் பார்க்க ஊருக்கு கிளம்புகிறார்கள்.
செழியன் கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவானா!
பார்க்கலாம்.
-
ஷண்முக பூரண்யா. அ
Awesome 👏👏
Good
Thank you and
Keep support me.