சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 11

108views
சட்டென்று திரும்பிய கவிதா, தம்பி செழியனை பார்க்கிறாள்.
கவிதாவைப் பார்த்த செழியன் கண்களில் நீர் வடிய எப்படி இருக்க அக்கா???
என்று கேட்க,
“எனக்கு என்ன நான் நன்றாக இருக்கிறேன்” என்று சொல்கிறாள்.
“என்ன ஆச்சு ? இது உன் மகளா” என்று கேட்கிறான்.
“ஆமாம் இவள் என் மகள் தான் மூத்தவள் .”
“என்ன இவளுக்கு உடல்நிலையில் ஏதாவது சரி இல்லையா” என்று கேட்க,
“ஆமா இவளுக்கு இதயத்தில் சிறிய கோளாறு இருக்கிறது. அதனால்தான் பரிசோதனை செய்ய வந்தோம்.”
சரி இவ்வளவு தூரம் வந்து விட்டாய் வீட்டிற்கு செல்லலாம் என்று கூப்பிடுகிறான்.
“அம்மாவிடம் நான் அடுத்த வாரம் வருகிறேன் என்று கூறினேன். இப்பொழுது என்னால் வர முடியாது என் இரு பிள்ளைகள் வீட்டில் உள்ளனர்” என்று கூறுகிறாள்.
“ஓ அப்படியா சரி இவள் என் மனைவி தேவி, இவளை மருத்துவரிடம் காண்பிக்க வந்தேன். மருத்துவர் பார்க்க நேரம் ஆகிறது. நாங்கள் பார்த்துவிட்டு வருகிறோம்.”
இங்கேயே சிறிது நேரம் காத்திரு என்று சொல்லிவிட்டு செல்கிறான்.
மருத்துவரை பார்த்து விட்ட செழியன். அக்காவைப் பார்த்து ஏதாவது சாப்பிடுகிறாயா ?என்று கேட்க,
எனக்கு ஒன்றும் வேண்டாம். பிள்ளைகள் வீட்டில் இருக்கிறார்கள் நான் அங்கு போய் சாப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய செழியன் ஆவலுடன் தாயிடம் போய் சொல்கிறான்.
“அம்மா இப்ப மருத்துவமனையில் என்ன ஆச்சுன்னு தெரியுமா உனக்கு , நான் நம்ம கவிதா அக்காவை பார்த்தேன். அவங்க மகளுக்கு ஏதோ உடம்பு சரி இல்லையாம். அதனால் மருத்துவமனைக்கு வந்திருந்தார் கலாம். அக்காவை நான் பார்த்ததும் வீட்டுக்கு வா என்று கூப்பிட்டேன். அக்காவோ இப்பொழுது என்னால் வர முடியாது வீட்டில் பிள்ளைகள் தனியாக இருக்கிறார்கள். என்று சொல்லி விட்டு போய்ட்டாம்மா”
இருவரும் பேசியது நினைத்து தாய் மகிழ்கிறாள்.
இருந்தாலும் மகளைக் காண வேண்டும் என்ற நினைவு இவளை கொள்கிறது.
நினைவு வந்ததும் அவள் அருகில் வைத்துக் கொள்வதற்காக வீடு பார்க்க செல்கிறாள்.
கவிதா தன் மகளுடன் அவளது வீட்டிற்கு வருகிறாள்.
அங்கு அவளது மகன் மற்றும் மகள் காத்திருக்கிறார்கள்.
அவர்களிடம் நாம் அடுத்த வாரம் நம் தாத்தா வீட்டிற்கு அருகில் போகப்போகிறோம் .
என்று சொல்கிறாள் அதனால் எல்லா பொருட்களையும் எடுத்து வைக்க வேண்டும்.
என்று கூற அவளது குழந்தைகள் ஒன்றுகூடி வேலை செய்கிறார்கள்.
ஒரு பக்கம் தாத்தா பாட்டியை பார்க்க ஆவலுடன் பேரப்பிள்ளைகளும், மற்றொரு பக்கம் மகளைப் பார்க்க ஆர்வமாக தாயும் காத்திருக்கிறாள்.
வீடு பார்க்க சென்ற லட்சுமிக்கு அவள் வீட்டு தெருவிலேயே வீடு கிடைத்து விட்டது.
இதை மக்களிடம் சொல்ல வேண்டும் என்பதற்காக உங்களை தொலைபேசியில் அழைக்கிறாள்.
அழைப்பை மகள் கவிதா எடுத்ததும் வீடு பார்த்து விட்டேன் இரண்டு நாட்களுக்குள் பொருட்களை எடுத்து வந்து விடு. என்று சொல்ல, சரிமா நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன் எந்த சொல்கிறாள் கவிதா.
தனதுதாய் வீட்டு அருகில் செல்ல தயாராகிறாள் .
லக்ஷ்மியின் நடவடிக்கை தன் மகள் வந்ததும் மாறுமா என பார்ப்போம்.
  • ஷண்முக பூரண்யா. அ

 

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!