156
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செழியனை லட்சுமியும், கவிதாவும் கவனித்துக் கொண்டிருந்தனர்.
மருத்துவமனைக்கு உணவு கொண்டு வந்து தருவதில் தொடங்கி வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் தேவி பார்த்துக்கொண்டாள்
குழந்தையை மாமனார் சரவணனிடம் கடையில் கொடுத்து விட்டு மருத்துவமனைக்கு சென்று வருவது வழக்கமாக வைத்துக் கொண்டாள்.
செழியன் மேலுள்ள கோபத்தினால் செழியன் இருக்கும் அறைக்கு மட்டும் செல்லாமல், வெளியே இருந்து பார்த்து விட்டு வந்தாள்.
ஒரு மாதம் கழித்து செழியனை வீட்டில் வைத்து பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணிய லட்சுமி மருத்துவரிடம் கேட்டு அழைத்து வருகிறாள்.
வீட்டிற்கு வந்தும் செழியனிடம் முகம் கொடுத்து பேசாமல் இருக்கிறாள் தேவி,
அவன் இருக்கும் வரையில் தேவி நுழையும் பொழுது அவளை கூப்பிட்டு பேச ஆரம்பிக்கிறான்.
“நான் உனக்கு மிக பெரிய துரோகம் இழைத்து விட்டேன். அதற்காக நீ எனக்கு பேசாமல், என் முகத்தை கூட பார்க்காமல் எனக்கு மிகப்பெரிய தண்டனை கொடுக்கிறாய் என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
என்னை மன்னித்துவிடு. நான் தான் தவறு செய்து விட்டேன். அதனால் அதற்கான உபகாரமும் நான் தான் செய்ய வேண்டும். நான் அவளைத் திருமணம் செய்து கொண்டேன். அதனால் அவளையும் நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இது உன்னை எந்த விதத்திலும் பாதிக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன்.”
“அப்படியா!…..என்னை எந்த விதத்திலும் பாதிக்காதா??? என்னுடைய கணவன், ஒருத்திக்கு பகிர்ந்தளிப்பது என்னை பாதிக்காது அப்படித்தானே…..”
“தேவி…….தயவுசெய்து நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்து கொள். “
“எதுவும் என்னிடம் சொல்லி என்னை சமாதானம் செய்ய வேண்டாம். எனக்கு அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் எனக்கு இல்லை. தயவுசெய்து சிறிது நாட்கள் என்னை தனிமையில் இருக்க விடுங்கள்.
உங்களிடம் பேசுவதற்கு எனக்கு விருப்பமில்லை.”
கோபத்துடன் அறையை விட்டு வெளியே செல்கிறாள்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
-
ஷண்முக பூரண்யா. அ
add a comment