285
மறுநாள் அதிகாலை எழுந்த தேவி வாசலை சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள்.
அப்போது எதிர்வீட்டில் உள்ள செழியனின் மாமி வந்து “தேவி..உன்னிடம் கோலமாவு இருக்கிறதா?
இருந்தாள் இந்த கிண்ணத்தில் கொண்டு வா… “
என்று சொல்கிறாள்.
“இதோ! எடுத்துட்டு வரேன் சித்தி” என்று கூறிவிட்டு உள்ளிருக்கும் டப்பாவிலிருந்து எடுத்து வந்து தருகிறாள்.
கோலமாவு வாங்கிய செழியனின் மாமி எ”ன்ன ஆச்சு தேவி??? நேற்றிரவு வீட்டில் ஏதேனும் பிரச்சனையா???
அவ்வளவு சத்தமாக இருந்தது. லக்ஷ்மியின் அழுகுரல் வேற கேட்டது ” என்று கேட்க…
“அதெல்லாம் ஒன்றும் இல்லை சித்தி வேற எங்கேயாவது சத்தம் கேட்டிருக்கும். அதை நீங்க தப்பா நினைச்சுட்டீங்க” என்று சொல்லி சமாளித்துக் கொண்டே உள்ளே வருகிறாள்.
அப்போது தூங்கி எழுந்த லட்சுமி யாரிடமும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
“அத்தை உங்களுக்கு டீ போட்டு எடுத்துட்டு வரட்டுமா….”
“எனக்கு அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ” என்று சொல்கிறாள் லட்சுமி.
“அத்தை நீங்கள் நேற்றும் சாப்பிடவில்லை, இப்பொழுதும் டீ வேண்டாம் என்று சொன்னா எப்படி?”
“இருங்க போய் டீ போட்டு எடுத்துட்டு வரேன் ” சொல்லிட்டு உள்ள போய் டீ போட்டு எடுத்துட்டு வந்து கொடுக்கிறாள்.
டீயை வாங்காமல் அப்படியே கோவமாக உட்கார்ந்து இருக்கிறாள் லட்சுமி.
அங்கிருந்து போன தேவி நேராக செழியன் இருக்கும் அறைக்கு சென்று தூங்கிக்கொண்டிருக்கும் செழியனை எழுப்புகிறாள்.
அத்தை நேற்றும் சாப்பிடவில்லை இப்பொழுது டீயும் குடிக்கவில்லை அப்படியே கோபமாக இருக்கிறார் என்று சொல்ல “இரு நான் வரேன் ” என்று சொல்லு வெளியே வருகிறான்.
அவனும் வந்து தன் அம்மாவை சாப்பிட சொல்ல அவள் மறுத்து விட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
கடைக்கு கிளம்பிய அப்பா லக்ஷ்மியை பார்த்து முறைத்துவிட்டு அப்படியே சென்று விட்டார்.
செழியனும் கடைக்குப் புறப்பட்டான்.
சமைத்து முடித்த தேவி மறுபடியும் லட்சுமியிடம் சாப்பிட வற்புறுத்துகிறாள்.
எனக்கு எதுவும் வேண்டாம். என்று சொல்லி அமைதியாய் இருக்கிறாள் லட்சுமி
சிறிது நேரத்தில் வெளிக்கதவை யாரோ தட்டுகிறார்கள்.
தேவி போய் பார்க்க தேவியின் அப்பாவும்,அம்மாவும் தேவியை பார்க்க வருகிறார்கள்.
“என்னம்மா நல்லா இருக்கியா ?” என்று கேட்ட தேவியின் தாய் , தந்தை
அடுத்து எங்கே ? என் தங்கை ! என்று கேட்க
“அத்தை உள்ளே தான் இருக்காங்க அப்பா வாங்க” என்று சொல்கிறாள்.
லஷ்மியை பார்த்த தேவியின் அப்பா “என்னம்மா உடம்பு எதாவது சரியில்லையா ஒரு மாதிரியா இருக்க” என்று கேட்க இல்லை அண்ணா கொஞ்சம் தலைவலியா இருக்கு அதான் என்று சொல்லி
தேவி என் அண்ணனுக்கும் அண்ணிக்கும் சாப்பாடு எடுத்துட்டு வா சொல்லிட்டு அவ உள்ள போய் தூங்குகிறாள்.
மதியம் உணவு சாப்பிட வந்த செழியன் மற்றும் அவரது அப்பா லட்சுமியை கூப்பிட வந்தவர்களிடம் எதுவும் காட்டிக்கொள்ளாமல் இதோ வரேங்க என்று சொல்லி அவளும் சாப்பிட வருகிறாள்.
இருவரையும் பார்த்த செழியன் “மாமா வாங்க மாமா எப்படி இருக்கீங்க? அத்தை சாப்டீங்களா?” என்று கேட்கிறான்.
“இப்போதான் சாப்பிட்டேன் பா வாங்க நீங்க வந்து சாப்பிடுங்க.”
“எல்லாரையும் பார்த்து ரொம்ப நாளாச்சு கல்யாணம் முடிஞ்சு அதிலிருந்து எங்களால் வர முடியாம போயிடுச்சு. அதனால தான் வந்தோம் பா நாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவோம் ஊர்ல வேலை இருக்கு எங்களை ஒன்னும் தப்பா நினைக்க வேண்டாம். நீங்களும் அடிக்கடி ஊருக்கு வந்துட்டு போங்க “
“எங்க மாமா வருவது எங்க கடை வியாபாரம் பாக்குறதே சரியா இருக்கு. நேரம் கிடைக்கும்போது கண்டிப்பா வரேன் மாமா இப்ப நான் கடைக்கு கிளம்புறேன்னு” சொல்லிட்டு கிளம்புகிறான்.
சிறிது நேரம் கழித்து தேவியின் தாய் தேவியின் அறையில் வந்து ரகசியமாக பேசுகிறாள்.
“தேவி உன்ன இங்க எல்லாரும் நல்லா பார்த்துக் கொள்கிறார்களா? மாப்பிள்ளை உன்னை கவனிக்கிறாரா?
நீ நல்லா இருக்கியா?” என்று கேட்க
“மா எனக்கு இங்கே எந்த குறையும் இல்லைம்மா. என்ன நல்லா பாத்துக்கிறாங்க. நீ ஒன்னும் பயப்பட அவசியமில்லை.”
அப்போதுதான் தேவியின் அம்மாவிற்கு நிம்மதி பிறக்குது.
“சரி நீ எதுவாயிருந்தாலும் அனுசரித்துப் போகுமா. அம்மா இப்ப கிளம்புறேன்.”
“நீ மாப்பிள்ளையோட ஊருக்கு வயேன் அடுத்த வாரம்” என்று சொல்லிட்டு கிளம்புகிறாள்.
மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல லட்சுமி யாரிடமும் பேசாமல் அமைதியை தொடர்ந்தாள்.
மீண்டும் சந்திப்போம்
-
ஷண்முக பூரண்யா . அ
👌
Nice 👏
Thank u