89
அடுத்த நாள் காலை திருமணம் இன்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் ஒருவித அச்ச உணர்வுடன் அமைதியாகப் படுத்திருந்தான் செழியன்.
மனைவி உறங்கிக் கொண்டிருக்கும்போது அவள் முகத்தை பார்க்கும் அவன் மனதுக்குள் குற்ற உணர்வு ஏற்படுகிறது.
இருப்பினும் தான் செய்வது சரி என்று அவனே சமாதானம் செய்து கொள்கிறான்.
அப்படியே அதிகாலை விடிய குளித்து முடித்துவிட்டு தயார் செய்த பெட்டியை எடுத்துக்கொண்டு “நேரமாகிறது நான் கிளம்புகிறேன். நான் திரும்பி வர ஒரு வாரம் ஆகும் குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்.”
தாய் தந்தை இருவரும் உறங்கிக் கொண்டிருக்கும் போதே அவர்களின் முகத்தை பார்க்காமல் கிளம்புகிறான்.
நேராக பக்கத்து ஊர் பேருந்து நிறுத்தத்தில் கார்குழல் இவனுக்காக காத்திருக்க இவனும் அங்கு சென்று அவளை சந்திக்கிறான்.
இருவரும் வேறு ஊருக்கு செல்கிறார்கள் .
அங்கே உள்ளக் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.
கடைக்கு சென்றிருந்த செழியன் அப்பாவிற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிய நிலையில் விழுகிறார்.
இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் தேவியின் வீட்டுக்கு செய்தி சொல்கிறார்கள்.
அவர்கள் வருவதற்குள் சரவணன் மருத்துவமனையில் தெரிந்தவர்களால் சேர்க்கப்படுகிறார்.
இந்த நிலையை செழியனுக்கு சொல்ல வேண்டுமென்று தேவி தொலைபேசியில் தொடர்புகொள்ள அவனது எண் கிடைக்கவில்லை கவலை தோய்ந்த முகத்துடன் இவனது அழைப்புக்காக காத்திருக்கிறாள்.
மறுபடி தொலைபேசியில் அழைக்க இந்த முறை செழியன் அழைப்பை ஏற்று பேசுகிறான்.
விஷயத்தைக் கேட்டதும் அதிர்ந்து போன செழியன் அங்கிருந்து பரபரவென வண்டியில் கிளம்புகிறான்.
அன்று இரவுக்குள் மருத்துவமனையை வந்தடைகிறான்.
சரவணன் இருக்கும் மருத்துவமனை அறைக்குள் செல்ல அனுமதி இல்லாததால் வெளியே பதட்டத்துடன் காத்திருக்கிறான்.
அழுதுகொண்டே இருக்கும் லட்சுமியின் அருகில் சென்று என்னவாயிற்று என்று கேட்க நடந்த விஷயத்தை சொல்கிறாள்.
“எதனால் இப்படி இவருக்கு??? நல்ல நன்றாகத்தானே இருந்தார். அவருக்கு இதுபோன்று இரண்டு மூன்று முறை வலி வந்து இருக்க அவர்தான் நம்மிடம் இந்த விஷயத்தை சொல்லாமல் மறைத்திருக்கிறார்.
இதை இப்போது மருத்துவர் தான் எங்களிடம் கூறினார்.”
அழுது கொண்டிருக்கும் லட்சுமிக்கு செழியன் எந்த விஷயமாக இருந்தாலும் அவர் குணமாகி வீட்டுக்கு வருவார் கவலை வேண்டாம் அம்மா. இரவாகிவிட்டது நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள்.
நான் இங்கேயே இருந்து பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி மனைவியையும்,லட்சுமியையும் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறான்.
சிறிது நேரத்தில் மருத்துவர்கள் சரவணன் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் ஓரிரு நாட்களில் அவரை வீட்டிற்கு அனுப்பலாம் என்று செழியன் இடம் கூறுகிறார்கள்.
கேட்டதும் மகிழ்ச்சி அடைந்த செழியன் இந்த தகவலை தனது தாய்க்கும் மனைவிக்கும் தொலைபேசியின் வாயிலாக தெரிவிக்கிறான்.
கேட்டதும் நிம்மதிப் பெருமூச்சுடன் தன்னை ஆசுவாச படுத்திக் கொள்கிறாள் லக்ஷ்மி.
மீண்டும் நாளை சந்திப்போம்.
-
ஷண்முக பூரண்யா. அ
add a comment