176
மௌனமாய் இருந்து செழியன் கார்குழலி யின் நச்சரிப்பால் மனமிரங்கி பேச ஆரம்பிக்கிறான்.
இருவரும் ஒன்றாக சாப்பிடுவது , ஒன்றாக கிளம்புவது என இவர்களுக்குள் நாட்கள் இப்படியே வருடங்களாக மாறியது.
செழியனின் மகள் வளர்ந்து ஐந்து வயதில் நிற்கிறாள்.
செழியன் அவளது மகள் ரத்தினாவை மிகவும் பாசமாக பார்த்துக் கொள்கிறான்.
அவளும் மற்றவர்களைவிட தன் தந்தையை அதிகம் நேசிக்கிறாள்.
வேலை முடித்து வந்ததும் தன் மகளிடையே அதிக நேரம் செலவிட்டான்.
அவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் தன் மகளுடன் வெளியே செல்வது, அவளுக்கு உணவு ஊட்டுவது,
அவளுடைய அனைத்து வேலைகளையும் அவனே பார்த்துக்கொண்டான்.
உறங்கும் நேரங்களிலும் ரத்தினா செழியன் மீது படுத்து உறங்குவாள்.
ஒரு முறை தேவி ரத்தினா செய்த தவறுக்காக அவளை அடிக்க வீட்டிற்கு வந்து பார்த்த செழியன் தேவியை அடித்து விடுகிறான் .
“என் மகள் மீது நீ கை வைக்கக்கூடாது அப்படி வைத்தால் உனக்குத்தான் அடி விழும்” என்று எச்சரிக்கிறான்.
கணவன் மனைவி உறவு நன்றாக போய்க்கொண்டிருக்க கார்குழலியின் மேல் அனுதாபம் ஏற்பட
தன்னை நேசித்ததால் தான் அவள் இப்படி வயதாகியும் திருமணம் செய்யாமல் தனியாக கஷ்டப்படுவதை நினைக்கிறான்.
அவளிடம் இதைப்பற்றி பேசுகிறான்.
” நீ ஏன் ?இன்னமும் திருமணம் செய்யாமல் இருக்கிறாய்???”
என்று செழியன் கேட்க………
நான் அன்று கோபத்தில் உங்களை “வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் என்னால் மறக்க முடியவில்லை அதுமட்டுமில்லாமல் என் உறவினருக்கும் அனைவருக்கும் இந்த விஷயம் தெரிந்து போக அனைவரும் என்னை தப்பாக பேச ஆரம்பித்துவிட்டனர் அதனாலேயே வேறு இடத்தில் வீட்டை மாற்றிவிட்டோம். இப்போது யாரிடத்திலும் நாங்கள் பேசுவதில்லை, எனக்கும் உங்களை நேசித்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ய விருப்பமில்லை அதனால் என் வாழ்க்கை இப்படியே கழியட்டும்.”
என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள் கார்குழலி.
இந்த வார்த்தையை கேட்டதும் செழியனின் மனது மறுபடி கார்குழலியின் மீது ஏதோ ஒரு பற்றுதல் உருவாகிறது.
வீட்டிற்கு வந்தாலும் தேவியுடன் பேசும் நேரம் குறைந்து கார்குழலி யைப் பற்றி அதிகம் யோசிக்க ஆரம்பிக்கிறான்.
திடீரென்று ஒருநாள் கார்குழலியிடம் செழியன் இன்று வேலை முடித்ததும் எனக்காக காத்திரு நான் உன்னுடன் சிறிது நேரம் பேச வேண்டும். என்று சொல்லி விட்டு அலுவலகப் பணிக்குச் செல்கிறான்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
-
ஷண்முக பூரண்யா. அ
add a comment