சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 29

197views
தேர்வை முடித்து விட்டு அன்று இரவு வீடு திரும்பிய செழியன் தனது குழந்தையை தேட லக்ஷ்மியோ அவர்கள் இருவரும் உள்ளே உறங்குகிறார்கள்.
“வெளியே காலையில் இருந்து வரவில்லை. “
“என்ன காலையில் இருந்து இருவரும் வெளியே வரவில்லையா???”
“நீங்கள் ஏதும் பார்க்க மாட்டீர்களா???”
“நாங்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம் எங்களிடம் இருந்த குழந்தையை உன் மனைவிதான் எடுத்துக்கொண்டு அவளது அறைக்குள் சென்று விட்டாள்.”
“இருங்கள் நான் போய் என்னவென்று பார்க்கிறேன்.”
தேவி ………தேவி ……. என்று குரல் கொடுத்துக்கொண்டே கதவைத் தட்டுகிறான்.
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த குழந்தை கதவைத் தட்டும் சத்தம் கேட்டதும் அலறி அழுகிறது.
“இதோ! வருகிறேன். ” என்று கதவை திறந்ததும் செழியன் கோபத்துடன் நிற்கிறான்.
“எதற்கு நீ காலையில் இருந்து வெளியே வரவில்லை? என் அம்மாவிடம் இருந்து குழந்தையை தூக்கிச்சென்று விட்டாயா ? எதற்கு இப்படி நடந்து கொள்கிறாய்?”
குழந்தை மறுபடியும் அழ தொடங்க தேவி செழியனுக்கு பதில் சொல்லாமல் குழந்தையைத் தூக்கி சமாதானம் செய்கிறாள்.
கோவமான செழியன் “நான் கேட்டுக்கொண்டே இருக்க பதில் சொல்லாமல் இருக்கிறாயா???”
“இல்லங்க பாப்பா அழுகுறா கொஞ்ச நேரம் இருங்க அதற்கு நான் பதில் சொல்கிறேன்.”
சிறிது நேரத்தில் குழந்தையை உறங்க செய்து செழியன்டம் பேசுகிறாள்.
“நீங்கள் காலையில் புறப்பட்டதும் காலையிலேயே எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஓய்வெடுக்க வந்துவிட்டேன் சிறிது நேரத்தில் இருந்த சித்தியும் அத்தையும் நான் எதுவும் செய்யவில்லை என்று நினைத்து பேசிக்கொண்டிருந்தனர், நீங்கள் அவர்களிடத்தில் சொல்லாமல் சென்று விட்டதற்கு நான்தான் காரணம் என்று என்னை திட்டினார்கள். அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன் உங்கள் பிள்ளைக்கு கால் வளைந்து இருக்கிறதா சொல்லுங்கள் அத்தை அப்படித்தான் சொல்கிறார். அதுதான் எனக்கு கோபம் வந்தது எந்த வார்த்தையும் பேசாமல் நான் குழந்தையை தூக்கிக்கொண்டு உள்ளே வந்து விட்டேன். இனிமேல் இப்படி நடக்காததுபோல் பார்த்துக் கொள்கிறேன்.”
“இவ்வளவு நடந்திருக்கிறது அம்மா என்னிடம் அதை சொல்லவில்லையா?? சரி இருக்கட்டும் அவர்களை அனுசரித்து நடந்து கொள் .நான் அவர்களைப் பார்த்துக் கொள்கிறேன்.”
வெளியே சென்ற செழியன் தாயைப் பார்த்து “அவளை நன்றாக நான் கேட்டுவிட்டேன். இனி இப்படி செய்யமாட்டாள். அதனால் நீ இப்படியே இருக்காமல் உறங்க செல் என்று சொல்லி அவனும் அவனது அறையில் வந்து படுத்து உறங்குகிறான்.
இப்படியே ஒரு மாதம் கழிகிறது.
எப்போதும்போல சரவணன், செழியனும் கடைக்கு செல்ல
காலை ஒரு பதினோரு மணி அளவில் செழியனுக்கு “அரசு வேலை உறுதி” செய்யப்பட்டு தபால் வருகிறது.
இதை பார்த்ததும் தேவி பெருமகிழ்ச்சி அடைகிறாள்.
உடனே இதை அத்தையிடம் சொல்கிறாள்.
அவளும் தன் மகனுக்கு அரசு அலுவலகத்தில் பணி கிடைத்ததை நினைத்து மகிழ்கிறாள்.
மதிய உணவுக்காக வீட்டிற்கு வரும் செழியனிடம் விஷயம் சொல்லப்படுகிறது.
தபாலை படித்துப் பார்த்த செழியன் நாளையே பணியில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று உற்சாகமாக இருக்கிறான்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
  • ஷண்முக பூரண்யா. அ

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!