89
ஓரிரு நாட்கள் இப்படியே செல்ல ……
செழியனிடம் மெல்ல மெல்ல பேச ஆரம்பிக்கிறாள்.
தேவி பற்றி புகார்களை அடுக்கினாள். தன் மகளை முன்னிறுத்த முடியும் என எண்ணினாள்.
தேவியைப் பற்றி தவறான கருத்துக்களை சொல்ல சொல்லத்தான்.
தன் மகளையும் மகள் குடும்பத்தையும் செழியன் பார்ப்பான் என தாய் நினைக்கிறாள்.
தினமும் செழியனிடம் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை திணிக்கிறாள.
செழியன் இல்லாத நேரங்களில் தேவி யாரிடமும் ஒழுங்காக பேசாமல் இருப்பது போலவும், கவிதாவும் அவள் மகள்கள் வந்தாலே தேவிக்கு பிடிக்கவில்லை என்றும் அவனிடம் பொய்களை சொல்கிறாள்.
இதை உள்வாங்கி கொண்ட செழியன். தேவியின் மேல் கோபப்படுகிறான்.
தேவியின் வீட்டருகில் செழியனின் உறவினர் ஒருவர் தேவியிடம் ஊரில் உள்ள இடத்தை விற்று உனக்கு என்ன உன் மாமியார் வாங்கி கொடுத்தார் என்று கேட்க………
ஒன்றும் புரியாமல் விழிபிதுங்கி நின்றாள்.
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்??? எனக்கு ஒன்றும் புரியவில்லை” என்று கேட்ட தேவிக்கு.
“போன மாதம் உன் கணவன் பெயரில் உள்ள இடத்தை விற்றார்கள் உனக்கு அது ஒன்றும் தெரியாதா???”
“அப்படி எனக்கு எதுவும் தெரியவில்லையே!!! அப்படி இருந்தால் என்னிடம் அவர்கள் சொல்லுவார்கள்.”
“உன்னிடம் அவர்கள் எல்லாவற்றையும் மறைக்கிறார்கள். ஏன் இப்படி எல்லாவற்றையும் தப்பாக சொல்கிறீர்கள்??”
“நான் தப்பாக சொல்லவில்லை போன வாரம் உனது நாத்தனார் மகள் பெரியவனான விஷயம் உனக்கு தெரியுமா???”
“என்ன?? பெரியவள் ஆகி விட்டாளா????”
“ஆம்! அவளுக்கு பூப்பெய்தல் விழா கூட முடிந்துவிட்டது அது உனக்கு தெரியுமா???”
இதைக்கேட்ட தேவி கோபத்தோடு தன் தாயிடம் அனைத்தையும் செல்கிறாள்.
தனக்கு உரிமையான இடத்தில் எதுவும் சொல்லாமல் அவர்கள் மறைத்து விட்டார்கள் என்று கோபத்தோடு தாயை அழைத்து மாமியார் வீட்டுக்கு செல்கிறாள்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
-
ஷண்முக பூரண்யா. அ
add a comment