209
குளித்துவிட்டு வந்த செழியனுக்கு தாய் உணவு பரிமாறுகிறாள்.
அப்போது வேலைக்கு சென்று இருந்த கவிதா பாதியிலேயே வருகிறாள்.
ஏன் இப்படி ஓடி வருகிறாய் என்று லட்சுமி கேட்க…….
பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது. தனது இளைய மகள் பெரியவள் ஆகிவிட்டாள் என்று அதனால் தனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, அவளை அழைத்து வந்து வீட்டில் உட்கார வைத்துவிட்டு உன்னிடம் வருகிறேன்.
இது மிகவும் சந்தோஷ படக்கூடிய விஷயம் என்றும் உனது அப்பாவிடம் சொல்லி விடு என்று கூறிவிட்டு, தன் மகனிடம் இந்த விஷயத்தைப் பற்றி சொல்கிறாள்.
பூப்பெய்தல் விழாவிற்கு நீதான் தாய்மாமன் என்ற முறையில் எல்லா செலவும் செய்ய வேண்டும்.
அந்த விழாவையே நீதான் நடத்தவேண்டும் என்று கூற அது தேவியிடம் சொல்லிவிடலாம் என்று சொன்ன செழியனுக்கு,
“அவள் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த சமயத்தில் அவளிடம் எதுவும் சொல்ல வேண்டாம்.
அதனால் நீயே அனைத்து வேலைகளையும் செய்து விடு.”
“சரி அம்மா என்ன வேண்டும் என்று சொல் நான் கடைக்கு போய் வாங்கி வருகிறேன்.
அவ்வளவு பொருட்களையும் முன்னால் மட்டும் வாங்கி வர முடியாது நானும் வருகிறேன் . நாம் இருவரும் போய் வாங்கி வரலாம்.”
இருவரும் கடைக்கு கிளம்பி தேவையான பொருட்களை வாங்கி வருகிறார்கள்.
பூப்பெய்தல் விழா அன்று மாலை வெகு விமர்சையாக நடந்தேறுகிறது.
விழாக்கு வந்த அனைவரும் எங்கே உன் மருமகள்??? இவ்வளவு விமர்சையாக விழா நடந்திருக்க உன் மருமகள் மட்டும் காணவில்லை? அவளும் இருந்திருந்தால் விழா முழுமை அடைந்திருக்கும் என்று சொல்ல
எனக்கு தெரியும் அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள்.
“அவளை எப்படி கஷ்டப்படுத்துவது அதனால் தான் அவள் வரவில்லை” என்று சொல்லி அனைவரின் வாயை அடைகிறாள்.
தன் தம்பி தன் மனைவி இல்லாமல் தாயின் பேச்சை கேட்டுக்கொண்டு விழாவை நடத்தி முடித்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் கவிதா இருக்கிறாள்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
-
ஷண்முக பூரண்யா. அ
👏👏👏
👍👌