181
இரண்டு நாட்களாகியும் லட்சுமி வீட்டில் அமைதியை தொடர்ந்தாள்.
ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சரவணன் மற்றும் செழியன்,
“வீட்டில் இப்படி இருக்காதே….உனக்கென்ன உன் மகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் அப்படித்தானே…உன் இஷ்டம் போல் எது வேண்டுமோ செய். நாங்கள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதனால் நீ சகஜமான நிலையில் இரு” என்று கூறிவிட்டு சென்றனர்.
சந்தோஷம் தாங்க முடியாமல் லட்சுமி முகத்தை கழுவிவிட்டு அவளுடைய தோழிகளை பார்க்க தெருவிற்கு செல்கிறாள்.
தெருவில் ஒரு கூட்டமே பேசிக்கொண்டிருக்கிறது.
அப்போது அதில் லட்சுமியும் கலந்து கொள்கிறாள்.
என்ன லட்சுமி இரண்டு நாட்களாக உன்னை காணோம் என்று கேட்க???
“லேசான தலைவலியாக இருந்தது அது தான் என்னால் வர முடியவில்லை.”
“சரி லட்சுமி என் மகனுக்கு திருமணமாகி ஆறு மாதம் ஆகிவிட்டது வீட்டில் ஏதேனும் விசேஷம் உண்டா???”
என மாறி மாறி தோழிகள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே சமாளித்து வீட்டுக்கு வருகிறாள் லட்சுமி.
வந்து வாசலில் உட்கார்ந்த லட்சுமிக்கு ஒரு இனிய செய்தி காத்திருந்தது.
தேவி தனது அத்தையிடம் ஒரு மாதம் நாட்கள் தள்ளி போயிருப்பதாகவும், உடல்நிலை சற்று மந்தமாகவும், மயக்கமாகவும் இருப்பதாக சொல்கிறாள்.
“இதை இரண்டு நாட்களுக்கு முன்னமே சொல்ல நினைத்தேன். ஆனால் நீங்கள் யாரிடமும் பேசாததால் நான் சொல்ல தயங்கினேன்.” என்று கூற
“நான் இப்படி இருந்தா என்ன நீ இதை சொல்லி இருக்க வேண்டியதுதானே” என்று சந்தோஷமாக சொன்னாள்.
உடனே கடைக்கு சென்று மருமகளுக்கு பூவும் இனிப்பு பலகாரமும் வாங்கிவந்து கொடுக்கிறாள்.
“உனக்கு என்ன வேண்டுமோ அதை என்னிடம் தயங்காமல் கேள். உனக்கு என்ன சாப்பிட பிடிக்கும் அதை நான் சமைத்து கொடுக்கிறேன். கடினமான வேலைகளை இனி செய்யாதே சிறிது நாட்களுக்கு சரியா
நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்கிறாள்.
செழியனின் வருகைக்காக காத்திருக்கிறாள் தேவி.
சிறிது நேரத்திலேயே வீட்டிற்கு வருகிறான் செழியன் வந்ததும் தேவியை தேடுகிறான்.
செழியனை பார்த்த தேவி நான் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று சொல்ல
என்ன அது??
அதுவா ……….. என்று வார்த்தை இல்லாமல் நிற்கிறாள்.
சொல் என்னது அது ?என்று மறுபடி கேட்க,
தலையை குனிந்தவாறு எனக்கு மாதம் தள்ளி போய் இருக்கு என்று சொல்ல
செழியனின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.
சிறிது நேரத்தில் வந்த லட்சுமி இனிப்பு எடுத்துக்கோடா என்று அவனிடம் நீட்டி இனி நம் வீட்டில் புதுவரவு வரப்போகிறது என்று கூறி விட்டு செல்கிறாள்.
இனிப்பை எடுத்த செழியன் அதில் பாதியை தேவிக்கு ஊட்டி விட்டு நெற்றியில் முத்தமிடுகிறான்.
நாளைக்கே நாம் மருத்துவமனை சென்று பரிசோதித்து விடலாம் சரியா
காலையில் நீ எழுந்து எந்த வேலையும் செய்யாதே…..
என்னுடன் மருத்துவமனைக்கு வா……
சரிங்க காலையில் பார்த்துக்கலாம், இப்ப வாங்க சாப்பிடலாம்.
அனைவரும் உறங்க செல்கிறார்கள்.
காலையில் எழுந்ததும் உணவு சாப்பிட்டு செழியன் தேவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறான்.
லட்சுமி ஓடிவந்து டேய் வண்டியில கூட்டிட்டு போகும்போது பாத்து பக்குவமா கூட்டிட்டு போ என்று சொல்லிவிட்டு செல்கிறாள்.
வீட்டில் வண்டி எடுக்கும் செழியன் நேராக மருத்துவமனையில் நிறுத்துகிறான்.
மனைவியை மெதுவாக அழைத்துச் சென்று உள்ளே மருத்துவரை பார்க்க காத்திருக்கிறான்.
அப்போது எதிர் அறையில் ஒரு பெண் தனது மகளுக்கு என்ன பரிசோதனையும் செய்து கொண்டிருக்கிறாள்.
திடீரென்று வேடிக்கை பார்த்த செழியன் தற்செயலாய் பார்க்க அது செழியனின் அக்கா கவிதா.
பார்க்கவே உருமாறி இருந்தாள் .
பார்ப்போம் நாளை அக்காவும் தம்பியும் பேசுகிறார்களா என்று.
-
ஷண்முக பூரண்யா . அ
add a comment