உலகம்

ஐரோப்பாவுடனான விண்வெளி திட்டம் நிறுத்தம்: தனியாக செவ்வாய் பயணத்தை தொடங்கும் ரஷியா

38views

உக்ரைன் மீது ரஷியா போர் புரிந்துவரும் நிலையில், அந்நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல நாடுகள் பொருளாதாரத்தடைகளை விதித்து வருகின்றன.

இந்த தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷிய விண்வெளி நிறுவனம் ஏற்கனவே ஐரோப்பாவுடன் விண்வெளி ஏவுதலுக்கான ஒத்துழைப்பை நிறுத்தி, அமெரிக்காவிற்கு ராக்கெட் என்ஜின்களை வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்தது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் செவ்வாய் கிரகத்திற்கு ஐரோப்பிய தயாரிப்பான ரோவரை ரஷிய ராக்கெட் கொண்டு செல்ல இருந்த நிலையில், தற்போது வின்வெளி திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது

இந்த நிலையில், இதுகுறித்து ரஷிய விண்வெளி நிறுவனத்தின் தலைவரான டிமிட்ரி ரோகோசின் கூறுகையில், “மிக விரைவில் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கான பயணத்தை செயல்படுத்துவதில் நாங்கள் பணியாற்றத் தொடங்குவோம்.

ஐரோப்பிய தயாரிப்பான ரோவரைக் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட ரஷ்யாவின் தற்போதைய தரையிறங்கும் அம்சமானது தேவையான அறிவியல் பணிகளைச் செய்ய முடியும் என்பதால், ரோவர் அவசியமாகத் தேவைப்படும் என்று தான் நினைக்கவில்லை.

ராக்கெட், ஏவுதளம் மற்றும் தரையிறங்கும் தொகுதி ஆகியவற்றைக் கொண்டிருந்த ரஷ்யா இல்லாமல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தனித்து செயல்பட குறைந்தது ஆறு ஆண்டுகள் தேவைப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!