ஐபிஎல் 2022 ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அதன் பல வீரர்களை ஏலம் எடுத்தது. தோனி தலைமையிலான அணி மீண்டும் சுரேஷ் ரெய்னாவை எடுக்கும் என சிஎஸ்கே ரசிகர்கள் உறுதியாக நம்பினர்.
ஆனால், சிஎஸ்கே ரசிகர்களின் நம்பிக்கையை விடுங்கள், எந்த அணியும் அவரை ஏலம் எடுக்கவில்லை என்பதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய மொத்தம் 25 வீரர்களை எடுக்கும் வரை ரசிகர்கள் காத்திருந்தனர். ஆல்ரவுண்டரான சுரேஷ் ரெய்னாவை எடுப்பார்கள் என்று, அப்படி எதுவும் கடைசி வரை நடக்கவே இல்லை. இதனால் மனமுடைந்த ரசிகர்கள் சிஎஸ்கே அணி குறித்து பல விதமான கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். தற்போது ரசிகர்களை குஷிப்படுத்த CSK அணி ஒரு வீடியோ பகிர்ந்துள்ளது.
சென்னை அணி சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்காததற்கு அணி தரப்பில் விளக்கமும் வெளியிடப்பட்டிருந்தது. இருந்த போதிலும், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். சிஎஸ்கே அணிக்காக பல போட்டிகளில் அதிரடி ஆட்டம் காட்டிய ரெய்னாவின் சிறப்பான தருணங்களையும், ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதனையடுத்து தற்போது தற்போது மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தோனியின் சிஎஸ்கே அணி சுரேஷ் ரெய்னாவின் வீடியோவைப் பகிர்ந்துள்ளது, அதில் அவரது சிறந்த பங்களிப்புக்காக அணி அவருக்கு சல்யூட் மற்றும் பகிரப்பட்ட அந்த 2 நிமிட வீடியோவில் அவரின் சாதனைகளைப் பற்றி பேசியுள்ளது.
இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தனது ட்விட்டர் அக்கவுண்ட் மூலம் ஷேர் செய்துள்ளது. 2 நிமிடம் 13 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில் 2008 முதல் 2021 வரை சுரேஷ் ரெய்னாவின் கேரியர் பயணம் குறித்து சொல்லப்பட்டுள்ளது. இதில் ரெய்னாவின் பயிற்சியும், அணியுடனான பிணைப்பும், சக வீரர்களுடனான நட்பும் காட்டப்பட்டுள்ளது.
சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பை அணியின் உரிமையாளர்களும் வீரர்களும் பாராட்டி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ரெய்னாவின் பங்களிப்பு இவ்வளவு என்றால், அவர் ஏன் ஏலத்தில் வாங்கப்படவில்லை என்பது ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.