சினிமா

ஐங்கரன் திரைப்படம் வரும் ஜன.26ல் திரையரங்குகளில் வெளியீடு

117views

இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ஐங்கரன் திரைப்படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் தமிழில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.

தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், நாச்சியார் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஜெயில் மற்றும் பேச்சுலர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ஐயங்கரன் திரைப்படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!