சினிமா

ஏமாற்றிய ஸ்பான்சர்ஸ்.. உடனடியாக உதவிய கமல்ஹாசன்.. மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு நடந்தது என்ன!

106views

நடிகர் கமல்ஹாசன் இப்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்

முற்றிலும் ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்

நயன்தாராவோட த்ரில்லர் படம்… வெளியாகி 5 வருஷம் ஆயிடுச்சா? கொண்டாட்டத்தில் படக்குழு!

இந்த நிலையில் ஸ்பான்சர்கள் கடைசி நேரத்தில் ஏமாற்றியதால் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உடனடியாக நடிகர் கமல்ஹாசன் உதவியுள்ளார்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் மீண்டும் இணைய இருந்த இந்தியன் 2 திரைப்படம் எதிர்பாராத பல சிக்கல்களால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க முடியாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது இந்த நிலையில் தனது கலையுலக குருவான கமல்ஹாசனுடன் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள விக்ரம் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது

இது வரை எந்த ஒரு படத்திற்கும் இல்லாத அளவிற்கு விக்ரம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே பல கோடி ரூபாய்க்கு பிசினஸ் ஆகியுள்ளதாக சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் என பலர் நடித்துள்ளதால் ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளது.விக்ரம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாக உள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசன் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு செய்துள்ள உதவி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் துபாய் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் ஸ்பான்சர்ஸ் மூலமாக செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென கடைசி நேரத்தில் ஸ்பான்சர்கள் ஏமாற்றியதால் வேறு வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்ற வீரர்கள் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து உள்ளனர் அப்பொழுது விளையாட்டு வீரர்களிடம் பேசிய கமல்ஹாசன் ஸ்பான்சர்களால் ஏமாற்றப்பட்டதை அறிந்து உடனடியாக இவர்களுக்கு துபாய் செல்ல தேவையான 6 லட்சம் மதிப்புள்ள விமான டிக்கெட்டுகள் மற்றும் இதர வசதிகளையும் உடனடியாக செய்து கொடுக்கும்படி கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இனி இந்த மாற்று திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று நாம் தான் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டும் மீண்டும் நம்மிடம் உதவி என்று வந்து நிற்கும் நிலைமையை அவர்களுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது என்பதையும் தன்னுடைய குழுவிடம் தீர்மானமாக கூறியதை அடுத்து அந்த விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக உணவு வழங்கி உபசரித்து.. நன்றாக விளையாடி கோப்பையுடன் திரும்ப வேண்டும் என உற்சாகப்படுத்தியும் அனுப்பியுள்ளார் நடிகர் கமல்ஹாசன் . இந்த தகவலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் ஒரு நேர்காணல் மூலம் பகிர்ந்ததை அடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கமல்ஹாசனுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!