தமிழ் சினிமாவின் நடிகர் அர்ஜுனுக்கு உதவியாளராக இருந்து செல்லமே என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின் பல வெற்றிப்படங்களை கொடுத்து பிரபலமானவர் விஷால்.
இவருக்கும் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியினதும் காதல் கதை தமிழ் சினிமாவில் முக்கியமானதாக பேசப்பட்டு வந்தது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் விஷால் திடீரென வரலட்சுமியின் காதலை புறம் தள்ளினார்.
அவரத தந்தை அண்ணன் ஆகியோர் ஆந்திராவில் திரைப்பட தயாரிப்பாளர்கள் என்பதால் அவர்களின் மூலம் பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகளை இவருக்கு நிச்சயம் செய்து வைக்க தீர்மானித்தமையே காரணம் என சொல்லப்பட்டது.
அதன்படி நிச்சயதார்த்தமும் கோலாகலமாக நடந்து முடிந்தது. எனினும் சில நாட்களின் பின் விஷாலை திருமணம் செய்து கொள்ள முடியாது என தொழிலதிபரின் மகள் தெரிவித்து விட்டார். இச்சூழ்நிலையில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைத்து பக்கங்களிலும் விஷாலுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டது.
மனம் நொந்து போயிருந்த விஷால் வரலட்சுமியை சந்தித்து தனது காதலை புதுப்பித்து கொள்ள முயற்சி செய்து வந்துள்ளார். அண்மையில் அப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்த பொழுது தான் தெரியாமல் தவறை செய்து விட்டதாகவும் இனிமேல் உன்னை விட்டு செல்ல மாட்டேன் என வரலட்சுமியின் கைகளை பிடித்து சத்தியம் செய்துள்ளார்.
ஆனார் வரலட்சுமியோ முறிந்தது முறிந்தது இனி அதனைப்பற்றி பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்து விட்டாராம். இனிமேல் இதுபற்றி பேசினால் விஷால் இருக்கும் பக்கமே திரும்பி பார்க்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம்.
அதன்பின் புரட்சி தளபதி போதையில் தள்ளாடி வருவதாக கொலிவூட் வட்டாரத்திலிருந்து கிசுகிசுக்கள் வந்துக்கொண்டிருக்கின்றன.




