உலகம்

உலகளவில் 36.29 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

47views

சீனாவின் உகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி 3-வது அலை, 4-வது அலையாக உருவெடுத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதன் கோர முகத்தை பல்வேறு வடிவங்களில் காட்டி வருகிறது.

இந்நிலையில்,  உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,28,59,116 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 56,44,733 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 28,67,30,028 ஆகவும் உள்ளது.

அமெரிக்காவில் புதிதாக 5,26,061 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,757 பேர் தொற்றால்  உயிரிழந்துள்ளனர்.  அமெரிக்காவில் மொத்தம் 7.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 8,98,284 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

ஒரே நாளில் பிரான்சில் 4.28 லட்சம், பிரேசிலில் 2.19 லட்சம், ஸ்பெயினில் 1.33 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!