விளையாட்டு

உலகம் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்..!! வரலாற்றில் இடம் பிடித்த இந்திய வீரர் ஸ்ரீகாந்து

46views

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது. இந்த தொடர் வரலாற்றில் இந்தியா இதுவரை 10 பதக்கம் வென்றுள்ளது. 2019ஆம் ஆண்டு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். ஆனால் ஆடவர் பிரிவில் இதுவரை யாரும் இறுதிப் போட்டி வரை கூட சென்றதில்லை.

முதல் முறையாக இந்த தொடரில் தான் அரையிறுதியில் இந்திய வீரர்கள் தங்களுக்குள் மோதினர்.இதில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு ஸ்ரீகாந்த் கிடாம்பி தகுதிப் பெற்றார். முதல் செட் இறுதிப் போட்டியில் தன்னை விட தரவரிசையில் பின் தங்கிய சிங்கப்பூர் வீரர் லோ கேன்யூ விடம் மோதினார் ஸ்ரீகாந்த் கிடாம்பி. தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய ஸ்ரீகாந்த் முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்தினார். 9-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற ஸ்ரீகாந்த், திடீரென்று லோ குவான் யூவின் ஆட்டத்தை எதிர்கொள்ள திணறினார் பரபரப்பான ஆட்டம் அடுத்தடுத்து புள்ளிகளை குவித்த லோ கேன் யூ, யாரும் எதிர்பாராத வகையில் முதல் செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனையடுத்து 2வது செட் ரோலர் கோஸ்டர் போல் சென்றது.

ஸ்ரீகாந்த் முன்னிலை பெற்றால், அடுத்த சில நொடியில் லோ கேன் யூ ஸ்ரீகாந்தை பின்னுக்கு தள்ளினார். ஸ்ரீகாந்துக்கு வெள்ளி பரபரப்பாக சென்ற இந்த ஆட்டம் 22-20 என்ற கணக்கில் லோ கேன் யூ கைப்பற்றினார். இதன் மூலம் லோ கேன் யூ தங்கம் வெல்ல, ஸ்ரீகாந்துக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஜப்பான் வீராங்கனை சாம்பியன் முன்னதாக மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை யமுகாச்சி, சீன தைபே வீராங்கனை தாய் சூயிங்கை எதிர்கொண்டார். சுமார் 39 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டி 21-14,21-11 என்ற செட் கணக்கில் யமுகாச்சி வென்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!