நிகழ்வு

உலகப் புத்தகத் தினத்தையொட்டி மு.முருகேஷ் எழுதிய ‘தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு’கட்டுரை நூல் வெளியீட்டு விழா

187views

ந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உலகப்

புத்தக தினத்தையொட்டி கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘தமிழ் ஹைக்கூ

நூற்றாண்டு’ எனும் கட்டுரை நூல் வெளியீட்டு விழா வந்தவாசி ஆசியன் இரத்த பரிசோதனை மைய வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை (ஏப்-11) நடைபெற்றது.

இந்த விழாவிற்கு வந்தை கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் பீ.ரகமத்துல்லா

தலைமை வகித்தார். சங்க செயலாளர் பா.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.  கவிஞர்கள் ம.பரிதாபானு, சா.ரஷீனா, தமிழ்ராசா ஆகியோர் உலகப் புத்தகத் தின விழாசிறப்புக் கவிதைகளை வாசித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் ஜெ.வெங்கடேசன், கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு’ எனும் கட்டுரை நூலினை வெளியிட, இராமலிங்கம் பெட்ரோல் நிலைய உரிமையாளர் இரா.சிவக்குமார், ரோட்டரி சங்கப் பயிற்சியாளர்

ஆ.இரமேஷ், ந.சுரேஷ்முருகன், நல்நூல்கர் பூ.சண்முகம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில், பாதிரி ஊராட்சி மன்றத் தலைவர் வெ.அரிகிருஷ்ணன், ஆர்.சி.எம். பள்ளி தலைமையாசிரியர் வி.எல்.ராஜன், பெ.பார்த்திபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் உலகப் புத்தகத் தினத்தையொட்டிபுத்தகப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கட்டுரை நூலின் ஆசிரியர் மு.முருகேஷ், நூலைத் தொகுத்த முனைவர் சு.சேகர் இருவரும் ஏற்புரையாற்றினர். நிகழ்வை சங்கத் துணைச் செயலாளர் கு.சதானந்தன் தொகுத்து வழங்கினார். நிறைவாக, தமிழ்ச் சங்கப் பொருளாளர் எ.தேவா நன்றி கூறினார்.

படக்குறிப்பு : வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உலகப் புத்தகத் தினவிழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு நூல் வெளியீட்டு விழாவில், கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் ஜெ.வெங்கடேசன், மு.முருகேஷ் எழுதிய தமிழ் ஹைக்கூ நூற்றாண்டுஎனும் கட்டுரை நூலை வெளியிடஇரா.சிவக்குமார் பெற்றுக் கொண்டார். அருகில், ரொட்டேரியன் .இரமேஷ், கவிஞர் மு.முருகேஷ், பீ.ரகமத்துல்லா, பா.சீனிவாசன் உள்ளிட்டோர் உள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!