சினிமா

உனக்காக – தனிப்பாடல் விமர்சனம்

179views
ரோஹித் கோபாலகிருஷ்ணன் இசையில் வெளிவந்திருக்கும் தனிப்பாடல் “உனக்காக”.
காதலை மையப்பொருளாக வைத்து வெளிவரும் இன்றைய பாடல்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்ததில்லை என்று கட்டியம் கூறுகிறது இந்த பாடல்.
“சிறுபுள்ளத்தனமா சிரிக்காதடி
உனக்காக நான் இருக்கேன் மறக்காதடி
பேரன்புக்கரன் நான் தானடி
பெரும்தொல்லையா என்னை நினைக்காதடி”
பாடலை ஆலயா மணி எழுதியிருக்கிறார். பேரன்புக்காரன் என்கிற வார்த்தைகளில் கவனம் ஈர்கிறார்.

பாடலாசிரியர்: ஆலயா மணி
காதலை மென்மையாக சித்தரிக்கும் இந்த இளைய முயற்சிக்கு முதலில் வாழ்த்துக்கள்.
எல்லோறையும் போல இருப்பதல்ல தனித்து தெரிய நிறைய முயற்சிகள் தேவைப்படுகிறது. அதை மிக கச்சிதமாகவே இந்த குழு செய்திருக்கிறது.
பாடலைப் பாடியிருக்கும் அபிஜித்ராவிற்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

பாடகர்: அபிஜித் ராவ்
ஸ்ரீஜித் கே.கோபால், மரியா சூசன் பாபு இருவரும் கதாபாத்திரங்களாக நடிக்கவைத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். ஓரு சில இடங்களில் கேமராக்களில் தனித்து தெரிகின்றனர்.

இயக்குனர் : எமில் டன்
எமில் டன் இயக்கமும், ஷாகிர் இப்ராஹிம் ஒளிப்பதிவும் இந்த பாடலுக்கு கூடுதல் பலம்.

இசை: ரோஹித் கோபாலகிருஷ்ணன்
ரோஹித் ஒரு சில இடங்களில் பிரமிக்க வைக்கிறார்.  ஒருமுறை பாடலை கேட்டுமுடிக்கும் போது நம்மையும் அறியாமல் பல்லவியை பாடத்தொடங்கிவிடும் அபாயம் அதிகமாக இருக்கிறது.
காட்சிப் படுத்தியிருக்கும் இடங்கள் கேரளாவை கண்முன் கொண்டு வருகிறது.
கடற்கரையில் மணல்வெளியில் தேவையான அளவிற்கு ஓட விட்டும் ஆடவிட்டும் லேசான அபிநயத்தால் சொக்க வைக்கின்றனர் கதாபாத்திரங்கள். நடன இயக்குனருக்கு தனி பாராட்டுக்கள்.
கலை நுணுக்கமான காதிபடுத்தலில் ஆர்ட் டிபார்ட்மென்ட் நன்றாக உழைத்திருக்க்கிறது.
இளைஞர்களின் இந்த முயற்சிக்கு விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
யூ-டியூபில் பார்க்க இணைப்பு சுட்டியை சொடுக்கி பார்க்கலாம்.
https://youtu.be/aNbBxHMOO3A

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!