110views
உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 30 குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில் உள்ள 400 படுக்கைகளும் நிரம்பிவிட்டதால், சமையல் கூடம், மருந்து சேமிப்பு கூடங்கள் என கிடைத்த இடங்களில் படுக்கைகளை வைத்து சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.




