தொழில்நுட்பம்

உங்கள் வேலையை ஈஸியாக்க ஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ள 7 புதிய வழிகள்!

79views

லக அளவில் அதிகம் பயன்படுத்தும் இமெயில் தளங்களில் ஜிமெயில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் ஜிமெயில் யூசர்ஸ்களுக்கு ஜிமெயில் பயன்பாடு எளிமையானதாக இருக்க புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சங்களை கூகுள் குரோமில் குரோம் வெப் ஸ்டோர்ஸ் மூலம் பயன்படுத்தி இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

1. செக்கர் பிளஸ் ஃபார் ஜிமெயில் (Checker Plus for Gmail)

இந்த புதிய அம்சமானது, நீங்கள் ஜிமெயிலை திறக்காமலேயே, ஜிமெயில் இன்பாக்ஸில் வந்துள்ள புதிய மெசேஜ்களை தெரிந்துகொள்வதை இலகுவாக்குகிறது. இந்த செக்கர் பிளஸை நீங்கள் இன்ஸ்டால் செய்தவுடன் உங்கள் கூகுள் குரோமின் எக்ஸ்டன்சன் பாரில் புது ஐகான் வரும். அதன் மூலம் உங்கள் இன்பாக்ஸில் வந்துள்ள புதிய இமெயில்களை தெரிந்துகொள்ள முடியும். பின்னர் அந்த மெயிலுக்கு பதிலளிக்கவும் முடியும். மேலும் ஆர்ச்சிவ் , டெலிட் செய்வதையும் மற்றும் ஸ்பேமாக குறிப்பிடுவதையும் இதன் மூலம் செய்ய முடியும்.

Gmail-இல் ஒரு முக்கியமான சாட்டை எவ்வாறு பின் மார்க் செய்வதென்று தெரியுமா?

2. சிம்பிள் ஜிமெயில் நோட்ஸ் (Simple Gmail Notes)

ஜிமெயில் பயன்படுத்தும் போது அதுகுறித்த தகவல்களை குறிப்பெடுத்துக்கொள்ள ஒரு நோட்ஸ் என்ற பக்கம் உருவாகும். அந்த நோட்ஸ் உங்கள் கூகுள் டிரைவில் சேமித்து வைக்க முடியும். இந்த ஆப்சனை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் உங்கள் இமெயில் பாக்ஸில் மேலே டைப் செய்வதற்கு வசதியாக டெக்ஸ்ட் ஏரியா ஒன்று காணப்படும். உங்கள் நோட்ஸின் கலரை நீங்கள் மாற்றி அதனை கூகுள் காலண்டரில் பதிவு செய்துகொள்ள முடியும். அது ரிமைண்டர் செட் செய்தால் தேவையான நேரத்தில் அது காட்டும்.

3. கிராமர்லி (Grammerly)

நீங்கள் புதிய இமெயிலை டைப் செய்தவுடன் அதில் உள்ள இலக்கணப்பிழை, ஸ்பெல்லிங் போன்றவற்றை உடனடியாக சரி செய்ய இந்த கிராமர்லி உதவும். மேலும் இது பணிசார்ந்த மெயில் என்றால் எப்படி இருக்க வேண்டும், உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றால் அந்த மெயில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும். நீங்கள் கிராமர்லி சர்வீசை பெற அதில் நீங்கள் சைன் இன் செய்ய வேண்டும்.

4. சேன்பாக்ஸ் (Sanebox)

இந்த சேன்பாக்ஸ் செட்டிங்கஸை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது உங்களுக்கு ஜிமெயிலை நிர்வகிக்கும். அதாவது உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸில் உள்ள முக்கிய மெயில்களை மட்டும் காட்டும் மற்றவை சேன்லேட்டர் என்ற ஃபோல்டரில் இருக்கும். உங்களுக்கு நேரம் இருக்கும் போது அதனை பார்த்து தெரிந்துகொள்ள முடியும். அதில் எந்த வகையான இமெயில் என்பதை வகைப்படுத்திக்கொள்ள முடியும்.

உதாரணமாக ஷாப்பிங் பில்கள் , சமூக வலைதளங்கள் குறித்த இமெயில்கள் ஒரு கேட்டகிரியில் வைத்துக்கொள்ள முடியும். உங்களால் இதனை 14 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். அதன் பிறகு நீங்கள் மாதம் தோராயமாக ரூ.510 செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம்.

5.பிரிஸ்கின் (Briskine)

இந்த ஆப்சனை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது ஒரே வார்த்தைகளை திரும்ப டைப் செய்யும்போது அதனை பயன்படுத்திக்கொள்ளும் அந்த நேரத்தை குறைக்க உதவும். நீங்கள் முன்னமே அந்த டெம்ப்ளேட்டை செட் செய்தால், நீங்கள் டைப் செய்யும் போது தானாக அந்த வார்த்தைகள் முன் வந்து நிற்கும். 30 டெம்ப்ளேட்டுகள் வரை இலவசமாக முன் கூட்டியே செட் செய்துகொள்ள முடியும். உங்களது இமெயிலில் பிரிஸ்கின் லோகோ இருக்கும். அதன் மூலம் நீங்கள் செட் செய்திருக்கும் அனைத்து டெம்ப்ளேட்டுகளையும் பார்க்கலாம்.

6. மெயில்டிராக் (MailTrack)

நீங்கள் அனுப்பும் இமெயில்கள் படிக்கப்பட்டிருக்கிறதா என்பதை உங்களால் அறிய முடியுமா? இந்த மெயில்டிராக்கை இன்ஸ்டால் செய்தால் உங்கள் மெயில் சென்றடைந்தது என்பதை அறிய ஒரு செக் மார்க்கும், அது திறந்து பார்க்கப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள இரண்டு செக்மார்க்கும் இருக்கும்.

இதன் மூலம் உங்கள் மெயில் திறந்து பார்க்கப்பட்டதா என்பதை அறிய முடியும். ஆனால் உங்கள் மெயில் சென்ட் வித் மெயில்டிராக் என்ற அடையாளத்துடன் செல்லும். 5 அமெரிக்க டாலர் கொடுத்து புரோ வெர்சனை இன்ஸ்டால் செய்தால் அந்த அடையாளம் இன்றி செல்லும்.

7. டிக்டேசன் ஃபார் ஜிமெயில் (Dictation for Gmail)

இதனை இன்ஸ்டால் செய்துகொண்டால் உங்கள் இமெயில் மெசேஜ் படித்துக்காட்டும். இதற்காக மைக்ரோபோன் பட்டன் உங்கள் மெசேஜ் பாக்ஸில் இருக்கும். அதனை பயன்படுத்தி உங்கள் இமெயிலை படித்து, நீங்கள் பயன்படுத்தும் சொற்களை கணித்து அதனை டைப் செய்யும்.

ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட 60 மொழிகளில் இந்த வசதி உங்களுக்கு கிடைக்கும். இந்த முறையில் வார்த்தைகள் 100 சதவிகிதம் சரியாக இல்லையென்றால் 90 சதவிகிதம் சரியாக இருக்கும். நீங்கள் பேசிய பிறகு , ஒருமுறை உங்கள் இமெயிலில் உள்ளவற்றில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து அனுப்பலாம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!