உக்ரைன் – ரஷ்ய போர் நீடித்துவரும் நிலையில் இனிதான் மோசமான சூழல் துவங்கவுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான் உடன் 90 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாக உரையாற்றினார்.
இந்தப் போரில் மோசமான சூழ்நிலை இனிமேல்தான் ஏற்படப்போகிறது என்று மேக்ரான் தெரிவித்ததாக அவரது உதவியாளர் தகவல் அளித்துள்ளார். நாஜி ஆதரவாளர்களை உக்ரைனில் இருந்து விரட்ட புடின் எந்த நிலைக்கும் செல்வார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே ரஷ்ய அணு ஆயுத பிரிவை தயார் நிலையில் வைக்கும்படி விளாடிமிர் புடின் ராணுவ தலைமைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்கா நிகழ்த்திய குண்டுவெடிப்புக்கு அடுத்து உலகில் அணு ஆயுத போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.