உலகம்

உக்ரைன் போர்.. மீட்புப் பணிகளை மேற்கொள்ள தற்காலிக போர் நிறுத்தம்.. ரஷ்யா அறிவிப்பு

45views

உக்ரைன் நாட்டில் போர் உச்சமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் ரஷ்யா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. செம ஆஃபர்.. சென்னையில் சொந்த வீடு வாங்க வாய்ப்பு வழங்கும் டிவிஎஸ் எமரெல்ட்.. மிஸ் பண்ணாதீங்க உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் ஒரு வாரத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய போர் 10ஆவது நாளாகத் தொடர்கிறது.

கீவ், கார்கிவ் என இப்போது உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் போர் இந்தப் போர் நடவடிக்கை காரணமாக உக்ரைன் வான்வழி கடந்த 10 நாட்களாகவே மூடப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வெளிநாட்டினர் பாதுகாப்பாக வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. போர் ஆரம்பித்த நேரத்தில் மாணவர்கள் உட்பட சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு இருந்தார்கள் எனத் தகவல் வெளியானது. அங்குச் சிக்கியுள்ளவர்கள் ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட அண்டை நாடுகள் வழியாகத் தாயகம் அழைத்து வரப்பட்டனர். சிக்கிய வெளிநாட்டினர் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வந்ததால் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள நகரங்களில் வசிக்கும் இந்தியர்களால் அண்டை நாடுகளுக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள இந்தியர்களை மீட்க ரஷ்யா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தியர்கள் வெளியேறும் வகையில் ராணுவ நடவடிக்கை இல்லாத சிறப்பு வழித்தடத்தை (humanitarian corridor) உருவாக்குவது தொடர்பாகப் பரிசீலனை செய்து வருவதாகச் சமீபத்தில் ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் அலிபோவ் தெரிவித்திருந்தார். தற்காலிக போர் நிறுத்தம் இந்தச் சூழலில் மனிதாபிமான அடிப்படிடையில் அங்குள்ள அப்பாவி பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் உக்ரைன் மீதான போரைத் தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

வோல்னோவாகா, மரியுபோல் ஆகிய இரு நகரங்களில் தான் இந்த தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை ரஷ்யா அறிவித்துள்ளது. வோல்னோவாகா, மரியுபோல் என இந்த இரு நகரங்களும் ரஷ்ய எல்லைக்கு அருகே உள்ள நகரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது எப்போது உக்ரைன் மீதான தாக்குதலை GMT நேரப்படி 6 மணி (இந்திய நேரப்படி காலை 11.30) முதல் நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

பொதுமக்கள் வெளியேற வழிவகை செய்ய மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை என ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. இந்த நேரத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டினர் உட்பட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு எத்தனை நேரம் அமலில் இருக்கும் என்பது தொடர்பாக அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. ரஷ்ய ராணுவம் அதேபோல மற்ற நகரங்களில் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு இல்லை. முன்னதாக, கடந்த வாரம் கீவ் நகரில் இருக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ரஷ்ய ராணுவம் அறிவித்தது. அந்த அறிவிப்பு வந்து சில மணி நேரத்திற்குள் கீவ் நகரில் இருந்த உளவு நிறுவனங்களின் அலுவலகங்கள், டிவி சேனல்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் நாட்டில் போர் தொடங்கிய போது, சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைனில் இருந்த நிலையில், பெரும்பாலான மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் ஏற்கனவே அண்டை நாடுகளுக்கு வந்துவிட்டதாகவும் அங்கிருந்து அடுத்த சில நாட்களில் அவர்கள் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!