இலங்கையில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்துள்ள பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் வரும் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிபா் அலுவலகம் அறிவித்துள்ளது.
அதிபா் கோத்தபய ராஜபட்ச தலைமையில் நடைபெற்ற கரோனா தடுப்புக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருவதால், நாட்டில் கட்டுப்பாடுகள் விரைவில் தளா்த்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கெஹேலியா ரம்புக்வெலா நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி இலங்கையில் 4,77,636 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 10,864 போ அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.