இலங்கை அணி 19 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 137 ரன் எடுத்து 26 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து, இலங்கை மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக ஜேசன் ராய், பட்லர் இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் ஜேசன் ராய் 9 ரன்கள் எடுத்து வெளியேற அடுத்து வந்த மாலன் 6 , ஜானி பேர்ஸ்டோவ் டக் அவுட்டாக பின்னர் மோர்கன், பட்லர் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக அணி எண்ணிக்கையை உயர்த்தினர்.
அதிலும் அதிரடியாக விளையாடி வந்த பட்லர் சதம் விளாசி கடைசி வரை களத்தில் நின்றார் அதில் 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் அடங்கும். அதேநேரத்தில் மோர்கன் கடைசி வரை 40 ரன்களுடன் களத்தில் நின்றார் இறுதியாக இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணியில் வனிந்தோ ஹசரங்க 3 விக்கெட்டை பறித்தார்.
164 ரன்கள் இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர் பாத்தும் நிஸ்ஸங்க 1 ரன் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களம் கண்ட சரித் அசலங்க நிதானமாக விளையாடி 21 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களில் குசல் பெரேரா 7 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். பிறகு ராஜபக்ச தலா 2 சிக்ஸர் , பவுண்டரி அடித்து 26 ரன் எடுத்தார். அடுத்து ஜோடி சேர்ந்த தசுன் ஷனக, ஹசரங்க கூட்டணியில் 53 ரன்கள் சேர்ந்தது.
இதையெடுத்து தசுன் ஷனக 26, ஹசரங்க 34 ரன் எடுத்து அடுத்தது ஓவரில் விக்கெட்டை இழக்க இறுதியாக இலங்கை அணி 19 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 137 ரன் எடுத்து 26 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணியில் ஜோர்டான், அதில் ரஷீத், மெயின் அலி தலா 2 , கிறிஸ் வோக்ஸ், லிவிங்ஸ்டோன் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து அணி விளையாடிய 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி விளையாடிய 4 போட்டிகளில் மூன்று போட்டிகள் தோல்வியும் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது.