செய்திகள்விளையாட்டு

இலங்கையுடன் டி20 தொடர்: இங்கிலாந்து வெற்றி

59views

இலங்கைக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் வென்ற இங்கிலாந்து அணி, 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, முதல் டி20 ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 2வது டி20 ஆட்டம் அதே கார்டிப் நகரில் நடந்தது. முதல் ஆட்டத்தைப் போலவே டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி, 20 ஓவர் முடிவில் 7விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்தது. அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 39 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத், மார்க் வுட் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

தொடர்ந்து 112 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. இடையில் மழை குறுக்கிட்டதால் 18 ஓவரில் 103 ரன் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றப்பட்டது. ஆனால் இங்கிலாந்து 16.1 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்து வென்றது. அந்த அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டோன் 29 ரன் எடுத்தார். இலங்கை த ரப்பில் வனிந்து ஹசரங்கா 2 விக்கெட் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!