உலகம்

இலங்கையில் நேற்றுடன் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1,000 ஐ கடந்தது. மேலும் 2,478 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

150views

நாட்டில் கடந்த 2020 அக்டோபர் மாதம் வரை 13 கொவிட் மரணங்கள் பதிவாகியிருந்தது. அதன் பின் உருவான 2ஆவது, 3ஆவது கொவிட் அலை காரணமாக அதிகமானோர் பாதிக்கப்ட்டதுடன், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து.
குறிப்பாக புதுவருட கொத்தணியில் உயிரிழந்தவர்கள் இறப்பு வீதம் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது.
அதன்படி நேற்றய தினம் நாளொன்றில் பதிவான ஆகக்கூடிய மரணங்களின் எண்ணிக்கையாக 34 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி நாட்டில் இதுவரை 1,015 பேர் கொவிட் – 19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் இலங்கை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையின் படி 82 ஆவது இடத்தில் உள்ளது. தொற்று உருவான சீனா 97 ஆவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் நேற்றய தினம் நாட்டில் மேலும் 2,478 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இத்துடன் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணி்க்கை 147,720 ஆக அதிகரித்துள்ளது. 26,575 பேர் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றய தினம் 1,516 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன்படி இதுவரை நாட்டில் 121,145 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!