இலங்கையில் இந்தியர்களை தனிமைப்படுத்துவது என்பது உண்மைக்கு புறம்பான செய்தி – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
தொழிலுக்காக பிற நாடுகளுக்கு செல்லும் இந்திய நாட்டவர்களை தனிமைப்படுத்த இலங்கை தயாராகி வருவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்து்ள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இந்தியர்களை இலங்கை தனிமைப்படுத்த அரச அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் முன் வந்துள்ளதாக தெரிவித்து அரசுக்கு எதிராக குற்றம் சுமத்தினார்.
இது சம்பந்தமாக நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சார் இதனைத் தெரிவித்தார்.
இது போன்ற செய்திகளை அரசியல் இலாபங்களுக்காக வெளியிடலாம், ஆனால் இது முற்று முழுதாக உண்மைக்கு புறம்பான செய்தி.
நாட்டில் தற்போது நிலவும் நிலமையில் வெளிநாட்டவர்களை நாட்டிற்கு அழைத்து தனிமைப்படுத்துவது சாத்தியமற்றதென அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.