சினிமாவிமர்சனம்

இரவின் நிழல் -திரை விமர்சனம்

148views
சிங்கிள் ஷாட்டில் ஒரு முழுத்திரைப்படம் அதுவும் நான்லீனியரில். சாத்தியமான்னு கேட்டால் ஏன் முடியாது என்ற கம்பீர கேள்வியுடன் களம் புகுந்திருக்கிறது ‘இரவின் நிழல்’
இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆச்சர்யங்களின் உக்கிரமான பெயர்.
எதிலும் ஒரு புதுமை. புருவங்களை உயர்த்தி கண்களால் வியப்புகளையும், பிரமிப்புகளையும் அனாயசமாக பதிவுசெய்யும் கோடம்பாக்கத்து ஆஸ்கார் கலைஞன்.
அடுத்தவர் சாதனையை முறியடித்து தம்சப் காட்டுபவர்களுக்கு மத்தியில் தனது நேற்றைய சாதனையை தானே முறியடித்து அசால்ட்டாக வலம் வருகிறார் பார்த்திபன்.

ஒத்த செருப்பை ஒற்றை மனிதனாய் சுமந்த அவரின் கனவை இப்போது எல்லோர் கண்களிலும் நிரப்பி ஒற்றை ஆளாய் கம்பீராக எழுந்து நிற்கிறார்.

மனிதர் கதைசொல்லி இருக்கும் விதமும் அதற்கேற்ற காட்சிப்படுத்தலின் சிரத்தையும் நம்மை பிரமிப்பின் உச்சிக்கே இட்டுச்செல்கிறது.

ஒரு நடுத்த வயது மனிதனின் வாழ்க்கையில் நடத்த சம்பங்களின் பின்னனியில் கதை சொல்லப்படுகிறது. கந்து வட்டிக்கு கடன் கொடுத்து அதை வசூலிக்க எடுக்கும் செயலால் தற்கொலை செய்துகொள்ளும் குடும்பம் அதன் பின்னணியில் காட்சிகள் விரிய நம்மை கதைக்குள் அழைத்துச்செல்கிறார் பார்த்திபன். சிறுவயதில் எவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் வாழ்க்கையை கடந்து வந்திருக்கிறான் அந்த மனிதன் என்பதை ஒவ்வொரு காட்சிப்படுத்தலின் போதும் தெளிவாக பார்வையாளனுக்கு கடத்தும் யுக்தி அருமை.
அலட்டிக்கொள்ளாத திரைக்கதை, இயல்பான வசனம் அடிக்கடி பயன்படுத்தும் லாவகமான வார்த்தைகள் இப்படியாக இரவின் நிழல் ஒரு புனிதத்தின் இன்னொரு பரிணாமத்தை நம் கண் முன் நிறுத்துகிறது.
ஏ,ஆர்,ரஹ்மான் இசையின் பாபம் செய்யாதிரு மனமே….நம்மை முணுமுக்க வைக்கிறது.
பின்னணி இசையில் மனிதர் இன்னொரு ஆஸ்கருக்கு தயாராகிக் கொண்டிருப்பதை சொல்லாமல் சொல்லிச்செல்கிறார்.
புதியப் பாதை பார்த்திபனை மீண்டும் பார்பது போன்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
இத்தனை வயது கடந்து போனாலும் தான் இன்னும் புதுமுகம் தான் என்பது போல உழைத்திருப்பது சினிமாவை நேசிக்கும் பலருக்கும் தன்னம்பிக்கை டானிக் பார்த்திபன் என்றால் அது மிகையில்லை.

ஆர்தர் A. வில்சன் கேமராவை பாராட்டியே ஆகவேண்டும். தொழில் நுட்ப கலைஞர்களின் பங்கு படத்தில் கவனிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது.
கதாபாத்திரம் – நடிகர்கள்
நந்து : இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
பிரேமகுமாரி : வரலக்ஷ்மி சரத்குமார்
பரமானந்தா : ரோபோ ஷங்கர்
சிலக்கம்மா : பிரிகிடா சகா
18 வயது நந்து : சந்துரு
30 வயது நந்து : ஆனந்த கிருஷ்ணன்
லட்சுமி : சினேகா குமார்
பார்வதி : சாய் பிரியங்கா ரூத்

படக்குழுவினர்:
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
இசை – ஏ ஆர் ரஹ்மான் (அகாடமி விருது வென்றவர்)
தயாரிப்பு – பயாஸ்கோப் USA, அகிரா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட்.
தயாரிப்பாளர்கள் – கால்டுவேல் வேல்நம்பி , அன்ஷு பிரபாகர் , Dr.பாலா ஸ்வாமிநாதன் , Dr. பிஞ்சி ஸ்ரீனிவாசன் , ரஞ்சித் தண்டபாணி , கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி & இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
நிர்வாக தயாரிப்பாளர் – ராக்கி பார்த்திபன்
ஒளிப்பதிவு இயக்குனர் – ஆர்தர் A. வில்சன்
கலை இயக்குனர் – ஆர் கே விஜய் முருகன்
ஒலிக்கலவை – எஸ். சிவக்குமார்
இணை இயக்குனர் – P.கிருஷ்ணமூர்த்தி
பாடல் வரிகள் – கடுவெளி சித்தர் , மதன் கார்க்கி, ராக்கெண்டு மௌலி, & இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
VFX மேற்பார்வையாளர் – கொட்டலங்கோ லியோன் (அகாடமி விருது வென்றவர்)
ஒலி தொகுப்பு மேற்பார்வை – கிரேக் மேன் (அகாடமி விருது வென்றவர்)
ஒலி வடிவமைப்பு மேற்பார்வை – குணால் ராஜன்
லைன் புரொடியூசர் – ஜே பிரபாகர்
கிம்பல் ஆப்ரேட்டர் – A.K.ஆகாஷ்
Focus Pullers – ஷங்கர் (டிசோஸா ), ராஜேஷ்
நடன இயக்கம் – ஷாந்தி குமார் , பாபா பாஸ்கர்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
மொத்தத்தில் இரவின் நிழல் பிரமிப்பின் வெளிச்சம்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!