சியோமி உலகின் முதல் இரட்டை செல்பி கேமரா ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்மார்ட் டிவி, Mi TV 6-ஐ ஜூன் 28 அன்று சீனாவில் நிறுவனம் அறிமுகப்படுத்தும். நிறுவனம் இந்த டிவியை இரட்டை பாப்-அப் கேமராவுடன் அறிமுகப்படுத்துகிறது. இந்த டிவியில் உள்ளமைக்கப்பட்ட கேமரா இருப்பதால், வீடியோ அழைப்பு வசதியும் இதில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
சாம்சங் (Samsung) மற்றும் ஹவாய் ஆகிய நிறுவனங்களும் செல்பி கேமராக்களுடன் ஸ்மார்ட் டிவிகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவற்றில் ஒரு வெப் கேமராதான் உள்ளது. இரட்டை கேமரா டிவியை முதன்முறையாக அறிமுகப்படுத்தும் ஒரே நிறுவனம் சியோமிதான். இந்த டிவி-யின் சில சிறப்பு அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே Mi TV 6 ஐப் பற்றிய சில தகவல்கலை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில், வாடிக்கையாளர்களுக்கு 4.2.2 சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் போன்ற சிறந்த அம்சங்கள் கிடைக்கும். மேலும், ஸ்பேஷியல் ஆடியோவும் அதில் கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட் டிவியில் (Smart TV) 100W பில்ட்-இன் ஸ்பீக்கர் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதன்மை ஸ்மார்ட் டிவியில் வைஃபை 6, இரண்டு எச்டிஎம்ஐ 2.1 போர்ட்கள், ஏஎம்டி ஃப்ரீஸ்டைல் பிரீமியம் செயலி மற்றும் கேமிங்கிற்கான குறைந்த லேட்டன்சி அம்சமும் கிடைக்கும். இந்த ஸ்மார்ட் டிவி Xbox சான்றிதழுடன் வரும்.
கேமிங் மற்றும் OTT இயங்குதளத்தின் மூலம் உள்ளடக்கத்தை பயன்படுத்தும் பயனர்களின் வசதியை மனதில் வைத்து நிறுவனம் இந்த ஸ்மார்ட் டிவியை வடிவமைத்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில் QLED குவாண்டம் டாட் தொழில்நுட்பத்துடன் காட்சி அம்சம் கிடைக்கும். டால்பி விஷன் ஐ.க்யூ அம்சம் அதன் டிஸ்பிளேவில் கிடைக்கும். மேலும், இந்த அம்சத்தின் மூலம், ஸ்மார்ட் டிவியின் சுற்றுப்புற ஒளியை தானாக சரிசெய்ய முடியும்.
சியோமி (Xiaomi) நிறுவனம் தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி சீனாவைத் தவிர வேறு சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா இல்லையா என்பது ஜூன் 28 அன்று தெரிவிக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR