விளையாட்டு

‘இந்த பார்ட்னர்ஷிப் ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுக்கும்’ – டு பிளெசிஸை வாழ்த்திய கோலி

58views

“பல ஆண்டுகளாக எனக்கு நன்கு தெரிந்த ஒரு நல்ல நண்பருக்கு ஆர்சிபியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளத்தில் மகிழ்ச்சி” என்று டு பிளெசிஸை பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஐபிஎல் ஏலம் முடிந்தது. அந்த ஏலத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஃபாஃப் டு பிளெசிஸை ரூ.7 கோடிக்கு வாங்கியது. இவர் அந்த அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசன் வரை ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி அனைத்து பார்மெட்களிலும் கேப்டன் பொறுப்பை துறந்த நிலையில் புதிய கேப்டனாக டு பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்சன், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, கோலி மற்றும் ஷேன் வாட்சன் வரிசையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஏழாவது கேப்டனாக ஆகியுள்ளார் டு பிளெசிஸ்.

இதனிடையே, டு பிளெசிஸை வாழ்த்தி முன்னாள் கேப்டன் விராட் கோலி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நான் சொன்னது போல், புதிய அணியாக, புத்துணர்ச்சியுடன் இந்த சீசனை ஆர்சிபி எதிர்கொள்ளவுள்ளது. மிக முக்கியமாக டு பிளெசிஸ் அணியை வழிநடத்த உள்ளார். பல ஆண்டுகளாக எனக்கு நன்கு தெரிந்த ஒரு நல்ல நண்பருக்கு ஆர்சிபியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளத்தில் மகிழ்ச்சி.

டு பிளெசிஸும் நானும் பல ஆண்டுகளாக பழகி வருகிறோம். கிரிக்கெட்டைத் தாண்டி நான் பழகிய சில நபர்களில் அவரும் ஒருவர். ஆர்சிபியை வழிநடத்த மிகவும் உற்சாகமாக இருக்கிறார். டு பிளெசிஸ், மேக்ஸ்வெல் மற்றும் ஆகியவர்களுடன் எனது பார்ட்னர்ஷிப் ஆர்சிபி ரசிகர்களுக்கு புதிய விருந்தாக அமையும். இந்த ஆண்டு சமமான அணியை ஆர்சிபி நிர்வாகம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதனால் அணி சீரானதாகவும், மிகவும் வலுவாகவும் தெரிகிறது. இது ஒரு அற்புதமான சீசனாக இருக்கும்” என்றுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!