வணிகம்

இந்துஸ்தான் யூனிலீவர் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,190 கோடி ஈட்டியுள்ளது.

143views

பிரபல லக்ஸ், ரின் சோப்பு தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்துஸ்தான் யூனிலீவர் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,190 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 44.8 சதவீதம் அதிகமாகும். 2020 மார்ச் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் லாபமாக ரூ.1,512 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

2021 மார்ச் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் ரூ.12,433 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2020 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 35 சதவீதம் அதிகமாகும். கடந்த மார்ச் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் இதர வருவாய் ரூ.109 கோடியாக குறைந்துள்ளது.

இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் 2020-21ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்க இறுதி டிவிடெண்டாக ரூ.17 வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த போது இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.09 சதவீதம் உயர்ந்து ரூ.2,409.05ஆக அதிகரித்தது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!