செய்திகள்விளையாட்டு

இந்திய மல்யுத்த வீரங்கனைக்குத் தற்காலிக தடை; மற்றொரு வீராங்கனைக்கு நோட்டீஸ்!

91views

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் விளையாட்டின் மகளிருக்கான 58 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகட் பங்கேற்றிருந்தார். 2 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பெலாரஸ் அணி வீராங்கனை வனீசாவை எதிர்த்து போட்டியிட்ட அவர், தோல்வியை தழுவி இருந்தார்.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் தொடரின்போது விதிமுறைகளை மீறியதற்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு வினேஷ் போகட்டை தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. அவர் மீது மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புகார் குறித்து வினேஷ் தரப்பில் விளக்கம் அளிக்க, ஆகஸ்டு 16-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக பயிற்சியாளர் வல்லர் எகோசிடம் அவர் ஹங்கேரியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அங்கிருந்து நேரடியாக டோக்கியோ வந்த அவர், இந்திய அணியுடன் தங்கவில்லை, இந்திய அணி வீரர் வீராங்கனைகளுடன் பயிற்சி மேற்கொள்ளவில்லை போன்ற புகார்கள் அவர் மீது பதியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, டோக்கியோ ஒலிம்பிக்கின்போது, இந்திய அணியின் ஒலிம்பிக் ஜெர்ஸியை அணியாமல், நைக் லோகோ இருந்த ஜெர்ஸியை அவர் அணிந்ததும் மூன்றாவது புகாராக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதனால், உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான மல்யுத்த போட்டிகளில் விளையாட வினேஷ்க்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் தரப்பில் விளக்கம் அளித்த பின்பு, அல்லது இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முடிவின் பொருத்து அவர் மீதான தடை நீக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். அந்த முறை அடைந்த ஏமாற்றத்தை இம்முறை இவர் பதக்கமாக மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில் இவருடைய ஃபார்ம் அவ்வளவு சிறப்பாக இருந்தது. 53 கிலோ எடைப்பிரிவில் உலக சாம்பியனை தோற்கடித்து தங்கம், ஆசிய மல்யுத்தத்தில் தங்கம், ரேங்கிங் சிரீஸ் மல்யுத்தத்தில் தங்கம் என மொத்தமாக நான்கு தங்க பதக்கங்களை இந்தாண்டு வென்றவர். பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதி சுற்றில் வினேஷ் தோற்றது ஏமாற்றத்தை அளித்தது.

இதே போல, மற்றொரு மல்யுத்த வீராங்கனையான சோனம் மாலிக், அலுவல் நடத்தையை சரியாக பின்பற்றவில்லை என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் இருந்து தாயகம் திரும்பியபோது, தனது பாஸ்போர்ட், பயணச்சீட்டு ஆகிய விவரங்களை இந்திய விளையாட்டு ஆணையத்தின் அதிகாரியை நேரில் சந்தித்து பெற்று கொள்ள வேண்டும். ஆனால், அந்த அதிகாரியை பெற்றுக் கொள்ளச் செய்துள்ளதார் சோனம். இதனால், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!