இந்திய எல்லையில் கொரோனா தீவிரமடைந்து வருவதால் எல்லைகளை மூடும் உத்தரவை வங்கதேசம் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தோற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்ததால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களின் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றன. இருப்பினும் சில மாநிலங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது.
இந்நிலையில் வங்கதேசத்தில் கொரோனா தீவிரமானதை அடுத்து அங்கு பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பும் அதிகரித்து வருகின்றது. அதேபோல், இந்திய எல்லைப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவுடனான எல்லைப் பகுதியை மூடும் உத்தரவை ஜூன் 30-ஆம் தேதி வரை வங்கதேசம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.