செய்திகள்விளையாட்டு

இந்தியா இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் – இந்தியா ஆதிக்கம்

48views

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.2வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லாட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக காயமடைந்த ஷர்குல் தாகூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இசாந்த் சர்மா சேர்க்கப்பட்டார்.இந்த போட்டியிலும் தமிழக வீரர் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கே.எல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினார். கே.எல் ராகுல் நிதானமாக ஆட ரோஹித் சர்மா சற்று வேகமாக ஆட்டினார். சாம் கரனின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்தார் ரோகித் சர்மா.

தொடர்ந்து அசத்திய ரோகித் சர்மா 83 பந்துகளில் அரைசதம் கடந்தார். அருமையாக ஆடி வந்த ரோகித் சர்மா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 83 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் போல்டு ஆகி வெளியேறினார். அடுத்து வந்த புஜாராவையும் 9 ரன்களில் வெளியேற்றி அசத்தினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். நிதானமாக ஆடி வந்த கே.எல் ராகுல் 137 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இதன் பிறகு வந்த கேப்டன் கோலியுடன் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்தார். அற்புதமாக ஆடிய ராகுல் 212 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.80 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. கே.எல் ராகுல் 106 ரன்களுடனும் கோலி 40 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!