‘இத மட்டும் பண்ணுங்க’.. ஆப்பிள் ‘AIRPODS’ இலவசம்.. ஆனா ஒரு சின்ன ட்விஸ்ட்.. அது இவங்களுக்கு மட்டும்தான்..!
கொரோனா தடுப்பூசியை மக்கள் ஆர்வமாக செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என பல நாடுகள் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகளில் அமெரிக்காதான் கொரோனாவால் அதிகளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 3 கோடியே 62 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 லட்சத்து 18 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தவதை அமெரிக்க அரசு தீவிரப்படுத்தி வருகிறது. ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டாததால், பல சலுகைகளை அந்நாட்டு அரசு அறிவித்து வருகிறது.
அந்த வகையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அமெரிக்காவின் வாஷிங்டன் நகர மேயர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பதின்ம வயதினருக்கு ஆப்பிள் AirPods வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள வாஷிங்டன் நகர மேயர் முரியல் பவுசர், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பதின்ம வயதினருக்கு இலவச ஆப்பிள் ஏர்போட்கள் வழங்கப்படும் 3 சென்டர்கள் பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார். அதன்படி ப்ரூக்லேண்ட் எம்எஸ், சூசா எம்எஸ், ஜான்சன் எம்எஸ் ஆகிய 3 சென்டர்களில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளும் பதின்ம வயதினருக்கு விலையுர்ந்த ஆப்பிள் AirPods இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இதற்கு 12-17 வயதிற்குட்பட்ட மாணவர்களாக இருக்க வேண்டும். இலவச AirPods பெற விரும்பும் மாணவர்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ள தயாராகி, தங்களது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரை அழைத்து கொண்டு மேற்குறிப்பிட்ட தடுப்பூசி மையங்களில் ஏதாவது ஒன்றிற்கு செல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.