உலகம்செய்திகள்

இத்தாலி: கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 13பேர் உயிரிழப்பு

112views

இத்தாலியின் வடக்கு மலைப்பகுதிக்கு செல்லக்கூடிய கேபிள் கார் நேற்று விபத்துக்குள்ளாகியதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலி நாட்டின் வடக்கே உள்ள பீடுமோண்ட் நகரில் ஸ்ட்ரெஸ்சா எனப்படுகிற கிராமத்தில் உள்ள மோகியோர் எனும் ஏரியிலிருந்து மோட்டரோன் என்ற மலைக்குன்று பகுதிக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள மக்கள் கேபிள் கார் வசதியை உபயோகித்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இவ்வழியாக செல்வதற்கும் கேபிள் காரில் பயணிப்பதற்கு அப்பகுதியில் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் இந்த கேபிள் கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நேற்று இந்த கேபிள் கார் 985 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இது விபத்தில் சிக்கி உள்ளது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள் உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு துரின் நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து மீட்பு பணியினர் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் தற்பொழுது பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!