இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் ஜோகோவிச், நடால் இருவரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்ற, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று போட்டியில் நம்பர் ஒன் வீரரும் ,5 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரான அலெஜான்ட்ரோ டேவிடோவிச் உடன் மோதி , 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 25% ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு முன் நடைபெற்ற போட்டியில் சிட்சிபாஸ், இத்தாலி வீரரான பெரேட்டினியை எதிர்கொண்டு, 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் 9 முறை சாம்பியனான ரபெல் நடால், கனடா வீரனான டெனிஸ் ஷபோவலோவை 3-6, 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் தோல்வியடையச் செய்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டி 3½ மணி நேரம் நீடித்தது.
இதைத்தொடர்ந்து பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி, ரஷ்ய வீராங்கனையான குடெர்மிடோவாவுடன் மோதி, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதுபோல மற்றொரு போட்டியில் மாட்ரிட் ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டத்தை வென்ற சபலென்கா, அமெரிக்க வீராங்கனையான கோகோ காப்புடன் மோதி, 5-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதைத்தொடர்ந்து பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஸ்வியாடெக், கரோலினா பிளிஸ்கோவா மற்றும் ஜெஸ்சிகா பெகுலா ஆகியோர் 3 வது சுற்றில் வெற்றி பெற்றனர். இதில் நடப்பு சாம்பியனான சிமோனா ஹாலெப், ஜெர்மனி வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பருக்குடன் மோதும்போது , காயம் ஏற்பட்டதால் போட்டியில் இருந்து பாதியிலேயே சிமோனா ஹாலெப் விலகினார்.
155views
You Might Also Like
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான “Chennai District Masters Athletic Championship 2025” தடகள போட்டி
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "Chennai District Masters Athletic Championship 2025" தடகள போட்டி...
மாநில அளவிலான கைப்பந்து போட்டி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முன்னாள் மாணவர் கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி 27.01.25 மற்றும் 28.01.25 ஆகிய இரு தினங்கள்...
காட்பாடியில் 50 -வது ஜூனியர் கபடி போட்டிகள்
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள அரசு உள்விளையாட்டு மைதானத்தில் 50 -வது ஜூனியர் கபடி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார். அருகில்...
காமன்வெல்த் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் வேலூர் குடியாத்தம் வீரருக்கு 4 தங்கப் பதக்கம் !!
தென்னாப்ரிக்கா சன்சிட்டி நகரில் நடந்த காமன்வெல்த் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூர் கிராமத்தை சேர்ந்த ஆசிய வலுதூக்கும் வீரர் ஜெயமாருதி...
விளையாட்டு போட்டிகளில் வெற்றி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர் 13.09.2024 அன்று இராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற கிராஸ் கன்ட்ரி ரேஸ் (Cross...




