விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட்: 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

41views

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்க்ஸில், இங்கிலாந்து 147 ரன்களும் ஆஸ்திரேலியா 425 ரன்களும் எடுத்தன. 278 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்க்ஸை தொடர்ந்த இங்கிலாந்து 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் சேர்த்திருந்தது. 4-வது நாள் ஆட்டம் தொடங்கியவுடன் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் ஜோ ரூட் அதிகபட்சமாக 89 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவின் சுழல்பந்து வீச்சாளர் நாதன் லியான்4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், அவர் டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்களை வீழ்த்தி சாதனைப் படைத்தார்.

19 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து முன்னிலை பெற்ற நிலையில், ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ஹெட் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!