நாட்டில் தற்போது பரவி வரும் வைரஸ் இந்தியாவில் உருமாற்றம் பெற்ற வைரஸ் இல்லை என்றும் தற்போது பரவி வரும் வைரஸானது இங்கிலாந்தில் பரவி வரும் B.1.1.1 என்ற வைரஸ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்புச் சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, குருநாகல் மற்றும் பொரலஸ்கமுவ பகுதிகளில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதித்தப் பின் இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
தமிழ் சிங்கள புத்தாண்டின் பின்னர் நாட்டில் பரவிய வைரஸ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மூலமே இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட உருமாற்றம் பெற்ற வைரஸின் தாக்கம் சாதாரண கொரோனா வைரஸினை விட 55 சதவீதம் மரணத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டதென தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கருத்து தெரிவித்த அவர் உருமாற்றம் பெற்ற வைரஸ் கண்டறியப்பட்ட மூன்று இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் தற்போது பரிசோதனைக்குட்ப்படுத்தப்பட்டுள்ளது என்றும் எதிர்வரும் 7 நாட்களுக்குள் ஏனைய பிரதேசங்களுக்கான பரிசோதனை முடிவுகளை வெளியிடவுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.