விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபனை 9 முறை வென்ற நம்பர் 1-க்கே அனுமதி இல்லை- ஜோகோவிச் விசா ரத்து

47views

உலகம் முழுதும் கோவிட் புது அலை பரவி வருகிறது, ஆஸ்திரேலியாவும் அதில் சிக்கியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் பங்கேற்க முடியாமல் செர்பிய நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்சுக்கு ஆஸ்திரேலிய அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது.

உலகம் முழுதும் கோவிட் புது அலை பரவி வருகிறது, ஆஸ்திரேலியாவும் அதில் சிக்கியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் பங்கேற்க முடியாமல் செர்பிய நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்சுக்கு ஆஸ்திரேலிய அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது.

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 17-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.

இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவினரும், அந்த நாட்டு அரசாங்க அதிகாரிகளும் உத்தரவிட்டிருந்தனர். இதனால், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாரா? இல்லையா? என்பதை தெரிவிக்க தொடர்ந்து மறுத்து வரும் ‘நம்பர் ஒன்’ வீரரும், 9 முறை ஆஸ்திரேலிய ஓபனை வென்றவருமான நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்தது.

ஏற்கெனவே பல முன்னணி வீரர்கள் ஒதுங்கிய நிலையில், ஜோகோவிச்சும் பின்வாங்கினால் போட்டி களைஇழந்து விடும் என்பதால் அவரை ஆட வைக்க அவருக்கு மட்டும் மருத்துவ விதிவிலக்கு அளிக்கப்படுவதாக முதலில் போட்டி அமைப்பாளர்களால் கூறப்பட்டது.

இந்த நிலையில், போட்டியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நேற்றிரவு மெல்போர்ன் விமான நிலையம் வந்த நோவாக் ஜோக்கோவிச் விசா ரத்து செய்யப்பட்டது. இதனால், அவர் விமான நிலையத்திலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளுக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரது விசா ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

விசா ரத்து செய்யப்பட்டதால் அவர் மீண்டும் செர்பியா திரும்பினார். தங்கள் நாட்டின் டென்னிஸ் நட்சத்திரம் அவமதிக்கப்பட்டுவிட்டதாக செர்பியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசு கூறுகையில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக கோரிய மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க நோவாக் ஜோகோவிச் தவறிவிட்டார். அதனாலேயே அவரது விசா ரத்து செய்யப்பட்டது என்று கூறியுள்ளது.

“ஜோகோவிச் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான போதிய மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. இதனையடுத்து அவரது விசா ரத்து செய்யப்படுகிறது” என்று ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

21வது கிராண்ட் ஸ்லாம் டைட்டிலை நோக்கி ஜோகோவிச் குறிவைத்திருந்தார். ஆஸ்திரேலியாவில் மைய அரசுக்கும், மாகாண அரசுகளுக்குமே கொள்கையை அமல்படுத்துவதில் அமெரிக்கா போல் முரண்பாடுகள் இருக்கிறது.

பிரதமர் ஸ்காட் மாரிசன், “சிறப்பு அந்தஸ்து, தகுதி யாருக்கும் கிடையாது, விதிகள் விதிகள்தான்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். ஆனால் செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வூகிக் கூறும்போது, செர்பிய நாடே ஜோகோவிச் பின்னால் உள்ளது, நம்பர் 1 வீரரை அவமானப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஜோகோவிச்சை இழிவு படுத்தியதற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர், என்றார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!