சினிமா

ஆத்திகர்களை விட நாத்திகர்கள் அதிக மூடநம்பிக்கை கொண்டவர்கள் – ஜேம்ஸ் வசந்தன்

52views

ஆத்திகர்களை விட நாத்திகர்கள் அதிக மூடநம்பிக்கை கொண்டவர்கள் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது ஃபேஸ்புக் பதிவில், “இறைநம்பிக்கை இல்லாதவர் ‘கடவுள் உண்டா இல்லையா? படைப்பா பரிணாமமா?’ என்கிற விவாதத்துக்குள் செல்லவேண்டாம் என்பது என் அறிவுரை.முதல் காரணம், அது முடிவற்ற விவாதம். நேரம்தான் வீண். இரண்டாவது, நம்பிக்கை உள்ளவர்கள் ‘கடவுள் சர்வ வல்லவர், எல்லாவற்றையும் படைக்க அவருக்குத் திராணியுண்டு’ என்று சொல்லிவிட்டால் அத்தோடு அவர்கள் வாதம் முடிவுறும். அதற்குள் எல்லாம் அடக்கம். ஏனெனில், அது நம்பிக்கை அடிப்படையிலானது.ஆனால், அறிவியல் அப்படியல்ல.

ஒவ்வொரு கூற்றையும் நிரூபிக்க வேண்டும். நிரூபித்தால்தானே அறிவியல். நிரூபிக்க வேண்டியது அறிவியல்தான், நம்பிக்கையல்ல. ஆனால் பாவம், நீங்கள் எங்கே போவீர்கள்! அதனால், இதைப்போன்ற வாதங்களை நீங்கள் அறவே தவிர்த்துவிடுவது நல்லது.ஆனால், ஆத்திகர்களை விட நாத்திகர்கள் அதிகமான மூடநம்பிக்கைக் கொண்டவர்கள். ஏதோ ஒரு அறிவியல் மேதை எங்கோ சொன்னது சரியாகத்தான் இருக்கும் என்கிற அதீத நம்பிக்கையில்தானே நாத்திகராக வாழ்கிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி ‘கடவுள் இல்லவே இல்லை’.. ‘கடவுளை கற்பித்தவன் முட்டாள். கடவுளை பரப்பினவன் அயோக்கியன். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி’ என்று சொன்ன பெரியாரை நான் பெரிதும் மதிக்கிறேன். இதைச் சொன்னதற்காக அல்ல.. என் தமிழ் சமூகத்துக்கு விடுதலை தேடித் தந்ததற்காக. ஒடுக்கப்பட்ட இனத்துக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்ததற்காக. அஞ்சி நின்றவர்களைத் தட்டியெழுப்பியதற்காக.என்றும் என் இனத்தின் தலைவன் அந்தக் கிழவன்.” எனப் பதிவிட்டுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!